Friday, November 25, 2011

தென்காசி மக்களுக்கு இலவச மிக்சி,கிரைண்டர், பேன் - சரத்குமார் வழஙகுகிறார்

தென்காசி. நவ. - 26 -தென்காசி சட்டமன்ற தொகுதியில் 30.11.2011 அன்று சட்டமன்ற உறுப்பினர்  ஆர்.சரத்குமார் தமிழக அரசு வழங்கும் இலவச மிக்சி, கிரைண்டர், பேன்ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். தென்காசி தொகுதிக்கு உட்பட்ட ஆயிரப்பேரி ஊராட்சியில் அங்கராயன்குளம், சில்லரைப்புரவு ஊராட்சியில் முத்துமாலைபுரம், வீ.கே.புதூர் தாலுகா முத்தம்மாள்புரம், கே.நவநீதகிருஷ்ணாபுரம், ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவற்றை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி கோட்டாட்சி தலைவர், தென்காசி, வீ.கே.புதூர் வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சமத்து மக்கள் கட்சி நிர்வாகிகள் எஸ்.வி.கணேசன், அமைப்பு செயலாளர் காளிதாசன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

விஜயகாந்த் மீது சரத்குமார் தாக்கு

சென்னை, நவ.25:பத்திரிகைகளில் செய்தி வர வேண்டும் என்பதற்காக சவால் விட்டு பேசுவதா என்றும் அதிமுக ஆதரவு இல்லாமல் 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றிருக்க முடியுமா என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ, தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கேள்வி எழுப்பி உள்ளார்..

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் பால் விலை, பேருந்துக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியிருப்பது தமிழகத்தின் தற்போதைய நெருக்கடியான பொருளாதார நிலையில் தவிர்க்க முடியாது என்பதையும், மக்கள் மீது இந்த விலை உயர்வு என்னும் சுமையை சுமத்துகிறோமே என மன வேதனையில்தான் முதல்வர் இவற்றை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் என்பதையும் ஏற்கனவே நான் தெரிவித்திருந்தேன்.

கடந்த கால ஆட்சியாளர்களின் பல ஓட்டு வங்கி அரசியல் அறிவிப்புகளாலும், தவறான பொருளாதார நிர்வாகத்தாலும் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை சரிசெய்ய அறிவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய விலை உயர்வுகள் கசப்பான மருந்தாக இருந்தாலும், அதனால் மக்கள் சோர்வடைந்தாலும், வருங்காலத்தில் தமிழகம் பொருளாதார அடிப்படையில் உயர வேண்டும். தமிழக மக்களின் வருங்காலம் செழிப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய முடிவை முதல்வர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.

இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்பது கடந்த ஆட்சியாளர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்கள் பேருந்து கட்டண உயர்வு, பால்விலை உயர்வு இவற்றைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடத்துவதுதான் வேடிக்கை. மத்திய அரசு பெட்ரோல் விலையை பலமுறை உயர்த்தியபோது வெறும் கண்டன அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டவர்களும், மவுனம் சாதித்தவர்களும் தமிழகத்தில் இன்றைய விலை உயர்வுக்காக உண்ணாவிரதப் போராட்டமும், கண்டனப் போராட்டங்களும் நடத்துவது வெறும் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்பதை உணர முடிகிறது.


இந்த இரட்டை நிலைப்பாடு உண்மையிலேயே வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக கூட அமரமுடியாத நிலை, உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வி என்ற நிலையில் மத்தியில் இருக்கும் பதவிச் சுகத்தை இழந்து விடக் கூடாது என்பதாலும், மத்திய அரசுக்கு பெட்ரோல் விலை உயர்வின் போது எந்தவித நெருக்கடியும் திமுகவினால் தரமுடியவில்லை என்பதையும்,


ஆறு மாத கால‌த்‌தி‌ற்கு‌ள்ளாக கூ‌ட்ட‌ணி த‌ர்ம‌த்தை ‌மீ‌றி அ‌.தி.மு.க.வை ‌விம‌ர்‌சி‌த்து வருவதோட‌ல்லா‌ம‌ல் ஆ‌ட்‌சியை கலை‌த்து ‌மீ‌ண்டு‌ம் தே‌ர்தலை நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று தே.மு.‌‌தி.க. தலை‌வ‌ர் ‌விஜயகா‌ந்‌த் இறுமா‌ப்போடு கூ‌றி‌யிரு‌ப்பது வேடி‌க்கையாக உ‌ள்ளது

இது தொடர்பாக அவர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வரும் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக தமிழக முதலமை‌ச்சர் ஜெயலலிதா சமீபத்தில் பால் விலை, பேருந்துக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியிருப்பது தமிழகத்தின் தற்போதைய நெருக்கடியான பொருளாதார நிலையில் தவிர்க்க முடியாது என்பதையும், மக்கள் மீது இந்த விலை உயர்வு என்னும் சுமையை சுமத்துகிறோமே என மன வேதனையில்தான் முதலமை‌ச்சர் இவற்றை நடைமுறைப்படுத்தி இருக்கிறார் என்பதையும் ஏற்கனவே நான் தெரிவித்திருந்தேன்.

கடந்த கால ஆட்சியாளர்களின் பல ஓட்டு வங்கி அரசியல் அறிவிப்புகளாலும், தவறான பொருளாதார நிர்வாகத்தாலும் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை சரிசெய்ய அறிவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய விலை உயர்வுகள் கசப்பான மருந்தாக இருந்தாலும், அதனால் மக்கள் சோர்வடைந்தாலும், வருங்காலத்தில் தமிழகம் பொருளாதார அடிப்படையில் உயர வேண்டும். தமிழக மக்களின் வருங்காலம் செழிப்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய முடிவை முதலமை‌ச்சர் ஜெயலலிதா எடுத்திருக்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.

இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்பது கடந்த ஆட்சியாளர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்கள் பேருந்து கட்டண உயர்வு, பால்விலை உயர்வு இவற்றைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் நடத்துவதுதான் வேடிக்கை.

மத்திய அரசு பெட்ரோல் விலையை பலமுறை உயர்த்தியபோது வெறும் கண்டன அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டவர்களும், மவுனம் சாதித்தவர்களும் தமிழகத்தில் இன்றைய விலை உயர்வுக்காக உண்ணாவிரதப் போராட்டமும், கண்டனப் போராட்டங்களும் நடத்துவது வெறும் அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்பதை உணர முடிகிறது.

இந்த இரட்டை நிலைப்பாடு உண்மையிலேயே வேடிக்கையாக இருக்கிறது. தமிழகத்தில் எதிர்க்கட்சியாக கூட அமரமுடியாத நிலை, உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வி என்ற நிலையில் மத்தியில் இருக்கும் பதவிச் சுகத்தை இழந்து விடக் கூடாது என்பதாலும், மத்திய அரசுக்கு பெட்ரோல் விலை உயர்வின் போது எந்தவித நெருக்கடியும் தி.மு.க.வினால் தரமுடியவில்லை என்பதையும், பெட்ரோல் விலை உய‌ர்‌வி‌ன் போது ம‌ட்டு‌மி‌ன்‌றி இல‌ங்கை‌த் த‌மிழ‌ர் ‌பிர‌ச்சனை‌யிலு‌ம் கூட சுய ஆதாய நோ‌க்‌கி‌ல்தா‌ன் நட‌ந்து கொ‌ண்டா‌ர்க‌ள் எ‌ன்பதையு‌ம் நாடே அ‌றியு‌ம்.

‌விலையே‌ற்ற‌த்தை க‌ண்டி‌த்து ந‌ேற்றைய ‌தின‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌ந்த ஒரு க‌ட்‌சி‌த் தலைவ‌ர், ஆ‌ட்‌சியை‌க் கலை‌த்து‌வி‌ட்டு ஓரா‌ண்டு கால‌ம் ஆளுந‌ர் ஆ‌ட்‌சி நட‌த்த ‌வி‌ட்டு அத‌ன் ‌பிறகு தே‌ர்த‌ல் நட‌த்‌‌தி யா‌ர் வெ‌ற்‌றி பெறுவோ‌ம் எ‌ன்று பா‌ர்‌ப்போ‌ம் எ‌ன்று சவா‌ல் ‌வி‌ட்டு பே‌சி‌யிரு‌க்‌கிறா‌ர். க‌ட்‌சி‌த் தொட‌ங்‌கிய‌‌தி‌லிரு‌ந்து கடவுளோடு‌ம், ம‌க்களோடு‌ம்தா‌ன் கூ‌ட்ட‌ணி எ‌ன்று கூ‌றி வ‌ந்தவ‌ர், நட‌ந்து முடி‌ந்த ச‌ட்டம‌ன்ற பொது‌‌த் தே‌ர்த‌லி‌ல் அ‌.தி.மு.க.வுட‌ன் கூ‌ட்ட‌ணி அமை‌த்ததா‌ல்தா‌ன் 29 தொகு‌திக‌ளி‌ல் அவரது க‌ட்‌சி வெ‌ற்‌றி பெ‌ற முடி‌ந்தது. உ‌‌ள்ளா‌ட்‌‌சி‌த் தே‌ர்த‌லி‌ல் அ‌க்கூ‌ட்ட‌ணி‌யி‌லிரு‌ந்து ‌வில‌கியதா‌ல் அவரது க‌ட்‌சி ‌மிக‌ப் பெ‌ரிய தோ‌ல்‌வியடைய நே‌ரி‌ட்டது.

ஆறு மாத கால‌த்‌தி‌ற்கு‌ள்ளாக கூ‌ட்ட‌ணி த‌ர்ம‌த்தை ‌மீ‌றி அ‌.தி.மு.க.வை ‌விம‌ர்‌சி‌த்து வருவதோட‌ல்லா‌ம‌ல் ஆ‌ட்‌சியை கலை‌த்து ‌மீ‌ண்டு‌ம் தே‌ர்தலை நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று இறுமா‌ப்போடு கூ‌றி‌யிரு‌ப்பது வேடி‌க்கையாக உ‌ள்ளது. ஒரு பொது‌த் தே‌ர்த‌ல் நட‌த்துவத‌ற்கு எ‌த்தனை ஆ‌‌யிர‌ம் கோடி ரூபா‌ய் செலவாகு‌ம், அதனா‌ல் அரசு‌க்கு‌ம், பொது ம‌க்களு‌க்கு‌ம் எ‌த்தகைய ‌சிரம‌ங்க‌ள் ஏ‌ற்ப‌டு‌ம் எ‌ன்பதை உணராம‌ல் பே‌சிய‌ிரு‌ப்பது ‌நியாயமானதாக தோ‌ன்ற‌வி‌ல்லை.

அரு‌தி‌ப் பெரு‌ம்பா‌ன்மையோடு வெ‌ற்‌றி பெ‌ற்று ஆ‌ட்‌சி ‌பீட‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் அரசை கலை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது‌ம் ஜனநாயக மரபுகளு‌க்கு முர‌ண்ப‌ட்டதாகவே அமை‌ந்து‌ள்ளது. இ‌ப்படியாக அர‌சிய‌ல் எ‌ன்றாலே ஆ‌ட்ச‌ியா‌ள‌ர்களை எ‌‌தி‌ர்‌ப்பது அரசை எ‌தி‌ர்‌த்து ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ங்க‌ள் நட‌த்துவது எ‌ன்று செ‌ய்‌திக‌ளி‌ல் வர வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காகவே அர‌சிய‌ல் நட‌த்துவது எ‌ன்று ஆரோ‌க்‌கியமான ஜனநாயக‌ம் ஆகாது. அரசு செ‌ய்யு‌ம் தவறுகளை சு‌ட்டி‌க்கா‌ட்ட வே‌ண்டியது அர‌சிய‌ல் க‌ட்‌சிக‌ளி‌ன் தா‌ர்‌மீக கடமையு‌ம், பொறு‌ப்பு‌ம் ஆகு‌‌ம் எ‌ன்றாலு‌ம் எ‌தி‌ர்‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பத‌ற்காக உ‌ண்மை ‌நிலைமை உணராமலு‌ம் ப‌ரி‌‌சீ‌லி‌க்காமலும இரு‌ந்து ‌விட‌க் கூடாது. ஆரோ‌க்‌கியமான கரு‌த்து‌க்களை ப‌ரி‌ந்துரைகளை அர‌சிய‌ல் கா‌ழ்‌ப்புண‌ர்‌ச்‌சிகளு‌க்கு அ‌‌ப்பா‌ற்ப‌ட்டு அரசு‌க்கு எடு‌த்துரை‌ப்பதே நாக‌ரீக அர‌சியலாகு‌ம்.

அதை‌ ‌விடு‌த்து போரா‌ட்ட‌ங்க‌ள், க‌ண்டன ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ங்க‌ள் நட‌த்துவது, சவா‌ல்க‌ள் ‌வி‌ட்டு பேசுவது போ‌ன்றவை ‌பிர‌ச்சனைகளு‌க்கு ‌தீ‌ர்வாகாது. நா‌ன் ஏ‌ற்கனவே ‌அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தபடி த‌மிழக முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதாவு‌க்கு த‌ற்போது ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம் ‌நி‌தி‌ச்சுமையை ‌நி‌ச்சயமாக த‌ன் ‌நி‌ர்வாக‌த் ‌திறமையா‌ல் ‌சீ‌ர்படு‌த்துவா‌ர்‌க‌ள் எ‌ன்று‌ம், அத‌ன் மூல‌ம் த‌ற்போது த‌மிழக ம‌க்களு‌க்கு ஏ‌ற்ப‌ட்டிரு‌க்கு‌ம் ‌நி‌தி‌ச்சுமையையு‌ம் இற‌க்‌கி வை‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்று‌ம் ‌திடமாக ந‌ம்‌பு‌கிறே‌ன் எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Monday, November 21, 2011

முதல்வரின் வேண்டுகோளை மக்கள் ஏற்க வேண்டும்: சரத்குமார்

சென்னை: பேருந்து கட்டணம், பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வு குறித்து முதல்வர் ஜெயலலிதாவின் உருக்கமான வேண்டுகோளை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் தனது நிர்வாகத் திறமையால் இந்த விலை உயர்வை விரைவில் சீரமைப்பார் என்று சமக தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக முதல்வர் பால் விலை, பஸ் கட்டண உயர்வையும், மின் கட்டணம் உயர இருப்பதையும் அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பில் தமிழக அரசின் நிதி நிலைமையையும், மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் உள்ளது என்று உள்ளபடியே விளக்கியுள்ளார். அந்த உருக்கமான அறிக்கை நம் ஒவ்வொருவர் இதயங்களிலும் வேதனையை அளித்துள்ளது.

ஒவ்வொரு தனிப்பட்ட பொதுமக்களும் இந்த விலை உயர்வால் பாதிக்கப்பட்டாலும் மக்களுக்காகவே இயக்கப்படும் ஆவின் நிறுவனம், அரசுப் போக்குவரத்து நிறுவனங்களை காப்பாற்றுவதற்காக தான் இந்த நடவடிக்கை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன் பால் விலை உயர்வால் ஏழை விவசாயிகளுக்கும், மாடு வளர்ப்பவர்களுக்கும் பாலுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பது உறுதி.

மேற்படி நிறுவனங்களில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும், வேலை வாய்ப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அரசு பால் விலையை உயர்த்தியிருந்தாலும் தனியார் பால் விற்பனை விலையைவிட ஆவின் பால் விலை குறைவாகத் தான் இருக்கிறது. தனியார் பேருந்துகள் தொலைதூரம் செல்ல வசூலிக்கும் கட்டணத்தைவிட உயர்த்தப்பட்ட அரசுப் பேருந்து கட்டணம் குறைவாகத்தான் இருக்கிறது. இந்த பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு மக்களுக்கு கஷ்டத்தை கொடுத்திருந்தாலும் நம் தமிழக அரசின் நிலையை மனதில் வைத்து ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

தமிழக முதல்வரின் சீர்மிகு செயல்பாட்டால் அனைத்துப் பிரச்சனைகளும் விரைவில் தீர்ந்துவிடும் என்பது உறுதி. பொருளாதார ரீதியாக பின் தங்கிய மக்களின் தேவைகளை விலையில்லா பல நல திட்ட உதவிகளை செய்து அவர்களின் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் தமிழகத்தின் முதல்வர், மேற்கண்ட நிறுவனங்களின் நிதிநிலையை தன்னுடைய நிர்வாக திறமையால் சீர்செய்து, நடுத்தர மக்களின் தேவை உணர்ந்து அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மேற்கண்ட கட்டணங்களை மீண்டும் சீரமைப்பார் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நம்பிக்கை தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Thursday, November 17, 2011

என்னை சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு- சரத்குமார் உருக்கம்!

தென்காசி:என்னை சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு என சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும்,தென்காசி எம்.எல்.ஏவுமான நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

தென்காசி புனித மிக்கேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சங்கம் சார்பில் கட்டப்பட்ட சைக்கிள் ஸ்டாண்ட் திறப்பு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா ஆகிய இருபெரும் விழா நடந்தது.

விழாவிற்கு சரத்குமார் தலைமை வகித்து சைக்கிள் ஸ்டாண்டை திறந்து வைத்து மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசும் போது, ""நானும் சாதாரண மனிதன்தான். உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் நான் கடந்த ஒரு மாதமாக தென்காசிக்கு வர இயலவில்லை. கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நூலகம் சென்று அறிவை வளர்த்து கொள்ளுங்கள். கேள்வி ஞானம் வேண்டும். இன்றைய சூழ்நிலையில் தினமும் படிக்க வேண்டும். புத்தக படிப்புடன் உலக அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். எனது மகனுக்கு 7 வயது ஆகிறது. அவனிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு தற்போதைய கல்வி அறிவு வளர்ந்து விட்டது.

கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. குழந்தைகள் பெற்றோரிடம் இருப்பதை விட அதிக நேரம் பள்ளியில்தான் இருக்கின்றனர். குழந்தைகளின் திறமையை ஆசிரியர்கள்தான் கண்டறிகின்றனர். ஆசிரியர்களைதான் நாம் முதல் கடவுளாக ஏற்று மரியாதை செலுத்த வேண்டும். என்னை வளர்த்து ஆளாக்கியது மக்கள்தான். என் படங்களை நீங்கள் பார்த்து எனக்கு பணத்தையும், புகழையும் கொடுத்தீர்கள். இன்று என்னை தென்காசி எம்.எல்.ஏ.,ஆக்கியுள்ளீர்கள்.

நான் கல்லூரியில் படிக்கும் போது அதிகளவில் எம்.ஜி.ஆர்.படம் பார்ப்பேன். இதனால் கல்லூரியில் இருந்து என்னை நீக்கி விட்டனர். என் அப்பா உடற்பயிற்சியில் தீவிரம் காட்ட வலியுறுத்தினார். அதனால் இன்று நான் 57 வயது ஆனாலும் 25 வயது இளைஞனாக இருக்கிறேன். இதுதான் எனது உழைப்பு. மனிதனுக்கு அதிகம் செல்வம் வந்தால் அதனை பகிர்ந்து அளிக்க அவன் முன் வரவேண்டும். எல்லோருக்கும் கடைசியில் ஆறு அடி நிலம்தான் தேவை.

இப்பள்ளிக்கு கட்டடம் கட்ட எனது சொந்த பணத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் கொடுப்பேன். எம்.எல்.ஏ.,நிதியில் இருந்து எவ்வளவு நிதி ஒதுக்கலாம் என பின்னர் கூறுகிறேன். கடந்த ஒரு மாத காலமாக நான் தென்காசிக்கு வரவில்லை என்று என்னிடம் செல்போனில் பலர் கூறினர். நான் அதற்கு பெருமைப்படுகிறேன். நான் ரோட்டில் செல்லும் போது என்னை சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு.

தென்காசி தொகுதியை 5 ஆண்டுகளில் தொழில் வளம் மிக்க தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். இதற்காக தொகுதி முழுவதும் சர்வே செய்யும் பணி நடக்கிறது. நான் இங்கு வீடு கட்ட இடம் பார்த்துள்ளேன். வீடு கட்டி இங்கேயே குடும்பத்துடன் வசிப்பேன். தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். இறைவன் படைப்பில் அனைவரும் சமம். சாதி, மத வேறுபாடுகள் இன்றி செயல்பட வேண்டும். குழந்தைகளின் திறமையை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள்'' என்றார் அவர்.

Wednesday, November 16, 2011

ரசிகர்கள் உற்சாகத்தால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார் நடிகர் சரத்குமார்

தென்காசி எம்எல்ஏவும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான நடிகர் சரத்குமார், தனது தொகுதியில் மக்களிடம் மனுக்களை பெறவும், அவர்களின் குறைகளை கேட்டறியவும் தென்காசிக்கு 16.11.2011 அன்று வந்தார்.

அங்கிருந்து, சுரண்டை பேரூராட்சிக்கு சென்ற அவர், பின்னர் அந்தப் பகுதி மக்கள் தந்த வரவேற்பை பெற்றதோடு, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். அதன்பிறகு அதன் பக்கம் உள்ள இடையர் தவனை பஞ்சாயத்துக்குச் சென்றார். அங்கே சிறிது நேரம் கட்சி நிர்வாகிகளிடம் பேசிய சரத்குமாரை, கிராம மக்கள் தங்களது ஆலயத்துக்கு வருமாறு அழைத்தனர்.

சரத்குமார் ஆலயத்துக்கு சென்றபோது, ரசிகர்கள் உற்சாகத்தில் வெடி வெடித்ததோடு, சுனோஷ் ஸ்பெரேயர் என்ற வரவேற்பு வெடியை வெடித்தனர். அதிலிருந்து கிளிம்பிய கில்ட் பேப்பர்கள், சரத்குமாரின் கண்ணில் பட்டு எரிச்சலை ஏற்படுத்தியது.

உடனடியாக அவர் சுரண்டையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கே முதல் உதவி சிகிச்சை செய்த மருத்துவர்கள், அவரை நெல்லையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லையில் உள்ள கண் மருத்துவமனை, சரத்குமாரின் கண்ணை சோதித்துவிட்டு, அவர் கண்ணில் உள்ள கில்ட் பேப்பரை அகற்றியது. பிறகு கண்ணுக்கு சிகிச்சை அளித்தோடு, பேட்டேஜும் போட்டனர்.

இதுகுறித்து பேசிய சரத்குமார், கண்ணில் கில்ட் பேப்பர் விழுந்ததால் எரிச்சலும், வலியும் இருந்தது. உடனே அகற்றப்பட்டதால் தற்போது வலி குறைந்துவிட்டது. டாக்டர்கள் 8 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளனர் என்று சொல்லிவிட்டு தென்காசிக்கு புறப்பட்டார்.