Friday, June 17, 2011

தென்காசி ரேஷன் கடையில் நேற்று சரத்குமார் எம்எல்ஏ அதிரடி ஆய்வு

தென்காசி ரேஷன் கடையில் நேற்று சரத்குமார் எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் நேற்று தென் காசி நகர்ப்பகுதியில் நன்றி தெரி வித்து பேசினார். கொடிமரம் பகுதியில் நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தபோது அந்த பகுதி ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த மக்கள் ரேஷன் கடையில் மாற்றுப்பொருட்கள் வாங்கினால்தான் அரிசி கொடுக்கப்படும் என்று வற்புறுத்துவதாக தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று அங்கிருந்த பணியாளர்களிடம் இதுகுறித்து விசாரித்தார்.

பின்னர் பணியாளர்களிடம், தமிழக முதல்வர் ஏழை மக்களுக்காக நிறைவேற்றி வரும் திட்டங்களில் முதன்மையானவை இலவச அரிசி வழங்கும் திட்டமாகும்.

அரிசி வழங்கும்போது தொகுதி மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமலும் எவ்வித குறைவுமின்றி சிறப்பாக செயல்பட்டு முதலமைச்சரின் திட்டத்தை செயல்படுத்திட ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கல்வியை வியாபாரமாக்கக் கூடாது- தென்காசியில் சரத்குமார் பேச்சு

தென்காசி:

கல்வி முற்றிலும இவலசமாக்கப்பட வேண்டும். அதை வியாபாரமாக்கக் கூடாது என்று தென்காசியில் சரத்குமார் எம்எல்ஏ பேசினார்.

தென்காசியில் அரசு பொது நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தென்காசி கல்வி மாவட்டத்தில் உள்ள 50 பள்ளிகளில் 10 வகுப்பு மற்றும் பிளஸ்டூ அரசு பொது தேர்வில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

இதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்எல்ஏ மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி பேசியதாவது,

அறிவாற்றலை வளர்த்து கொள்ள நூலகம் பெரிதும் உதவுகின்றது. மாணவ, மாணவிகள் பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் தாய் மொழியை பேசுவதில் பெருமை கொள்ள வேண்டும்.

தாய்மொழியை நேசிப்பவனால்தான் தாய்நாட்டை நேசிக்க முடியும். தென்காசி தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவேன். 50 லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவம் படிப்பது வேதனையாக இருக்கிறது.


கல்வி இலவசமாக்கப்பட வேண்டும். எவ்வளவு சிக்கரம் முடியுமோ அவ்வளவு சிக்கரம் அது நடந்தே ஆக வேண்டும். கல்வி வியாபாரம் ஆவது வளரும் நாட்டுக்கு நல்லதல்ல. சிறந்த மாணவ, மாணவியர்தான் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முடியும் என்றார்.