சென்னை, ஜூலை.15 - ஜனாதிபதி தேர்தலில் சங்மாவை ஆதரிக்க முதல்வர்
ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அவரது முடிவுக்கு கட்டுப்பட்டு சங்மாவை
ஆதிரிப்போம் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற
உறுப்பினருமான நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். படித்த இளைஞர்கள்
அதிகம் பேர் அரசியலுக்கு வரவேண்டும், ஈடுபாடு உடையவர்களாகவும் இருக்க
வேண்டும் என்று நடிகர் சரத்குமார் தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக
கூறினார்.
பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார். இவர் தனது பிறந்தநாளை நேற்று காலை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் மகனுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதுவரை படத்தயாரிப்பாளர் சீனிவாசன், அம்மா கிரியேஷன்சிவா, ஞானவேல் ராஜா, கே.ராஜன் மற்றும் எர்ணாவூர் நாராயணன், (ச.ம.க.து.தலைவர்) ஜே.எம்.ஆரூண் (எம்.பி) கட்சி தொண்டர்கள். சினிமா ரசிகர்கள் என பலரும் திரளாக கூடி நேரில் வாழ்த்தினார்கள். பின்னர் பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக சரத்குமார் கூறியதாவது:-
இன்றைய கால கூட்டத்தில் அனைத்தும் மாறிக்கொண்டே வருகிறது. பல துறைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதை வரவேற்க வேண்டும். அதே நேரத்தில் ஏழை பணக்காரன், ஏற்ற தாழ்வுகள், கீழ் சாதி, மேல் சாதி, மத வேற்றுமைகள் இன்னும் மாறவில்லை. இது மாற வேண்டும். இதற்காக பாடுபடுவேன். கல்வியில் மாற்றம் வேண்டும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கல்வி கற்பவரின் நிலை கீழ் நோக்கி இருக்கிறது. குறிப்பாக சேலம் பகுதியில் 80 சதவீதம் பேர் கல்வி கற்றவர்களாக உள்ளனர். தென்காசி பகுதியில் 84 சதவீதம் பேர் கல்வி கற்றவர்களாக உள்ளனர். இப்படி குறைபாடு உள்ள பகுதிகளில் முழுமையான கல்வி கிடைக்க வேண்டும். இப்போது படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். காரணம் பொருளாதாரம் உயர்த்திருந்தாலும், விஞ்ஞானம் அபார வளர்ச்சி பெற்றுயிருந்தாலும் இதற்கு மூலக்காரணமாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள்.
மக்களுக்கு அரசு எவ்வளவோ நன்மைகள் செய்தாலும் முழுக்க முழுக்க அரசாங்கமே அனைத்தையும் செய்ய வேண்டும் என்று எண்ணக்கூடாது. மக்களும் விழிப்புணர்ச்சி பெற்று அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். என்னுடைய கருத்தில் இன்னொன்றை ஆழமாக பதிவு செய்ய விரும்புவது அனைவருக்கும் கல்வி இலவசமாக கிடைக்க வேண்டும். சீட்வாங்கும் போது பெற்றோர்கள் படும் கஷ்டம் பரிதாபமாக இருக்கிறது.
இப்போது தமிழ் கலாச்சாரம், பண்பாடு அதிகம் மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. பழக்க வழக்கம், நடை, உடை, பாவனைகள் மாறிவிட்டது. இதனால் பாதிப்பு ஏற்படும். என்கிற நிலை வரும் போது அதை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டவர்கள் இப்போது அதிகம் பேர் தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள். இவர்கள் அவர்களுடைய பண்பாட்டுக்கு தகுந்த மாதிரிதான் இங்கே நடந்து கொள்வார்கள். அதனால் பிரச்சனை ஏற்படும் போது அதை ஒழுங்குப்படுத்திக் கொள்ளலாம். இதனால் நம் நாட்டுக்கு சீரழிவு என்பது தவறு என்று நான் கருதுகிறேன். இங்கே ஜனாதிபதி தேர்தலில் எங்கள் கட்சியின் நிலைபாட்டை கேட்கிறீர்கள்.
ஜனாதிபதி தேர்தலில் சங்மாவை ஆதரிப்பதென முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அவரது முடிவுக்குக் கட்டுப்பட்டு சங்மாவை ஆதரிப்போம்.
இவ்வாறு நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.