தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று அவரது கட்சி அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கட்சிதலைவர் சரத்குமார் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். | |
| . | |
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு பெறுகிறார். அவரை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தென்காசி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதற்காக விஜயகாந்தும் சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். சரத்குமாருடன் நடிகைகள் பசி சத்யா, பாத்திமா பாபு, நளினி, நடிகர் சின்னி ஜெயந்த் ஆகியோர் சென்றிருந்தனர். மேலும் சின்னத்திரை நடிகர்களும் விஜயகாந்தை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர். |
நன்றி : தினமணி

