Monday, March 21, 2011

மார்ச் 24-ம் தேதி வேட்புமனு தாக்கல்-சரத்குமார்

திருநெல்வேலி, மார்ச் 21: 
 அ.தி.மு.க. கூட்டணியில் தென்காசி, நான்குனேரி ஆகிய 2 தொகுதிகளைப் பெற்றுள்ளது ச.ம.க. இதில் தென்காசி தொகுதியில் அக் கட்சியின் தலைவரான சரத்குமார் போட்டியிடுகிறார்.  

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் தென்காசி செல்லும் வழியில் திருநெல்வேலியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:  பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால்தான் தமிழ்நாட்டில் நல்லாட்சி மலரும்.  

அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி அந்த வெற்றியைப் பெறும். அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு, உறுதியோடு கடினமாக உழைத்து வெற்றிக் கனியை பறிப்போம்.  

தென்காசி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் எனற எண்ணத்தில்தான் எனது நடிப்புத் தொழிலை ஏற்கெனவே குறைத்துக் கொண்டேன். ஆனால், அது மட்டுமே காரணம் அல்ல. இப்போது திரைப்படத் தொழிலை ஒரு குடும்பம் கையில் எடுத்துக் கொண்டு நடத்தி வருகிறது. நான் எனது நடிப்புத் தொழிலை குறைத்துக் கொள்ள அதுவும் ஒரு காரணம்.  

தென்காசி தொகுதியில் நான் வெற்றி பெற்றால் வெளியூருக்கு ஓடிவிட மாட்டேன். வாரத்தில் திங்கள் முதல் வியாழன் முடிய நான்கு நாள்கள் தொகுதியில் இருந்து மக்கள் பணி செய்வேன். தொகுதி மக்களின் தேவை அறிந்து அதை நிறைவேற்றி கொடுப்பேன். 

 நான் மார்ச் 24-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறேன். இன்றே எனது பிரசாரம் தொடங்கி விட்டது. 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய ஆசைதான். ஆனால் காலம் குறைவாக உள்ளது. எனவே, முடிந்த அளவு தொகுதிகளில் பிரசாரம் செய்வேன்.  என்றார் சரத்குமார்.

சட்டசபை தேர்தல்: இன்று முதல் தென்காசியில் சரத்குமார் பிரசாரம்

தென்காசி: தென்காசி சட்டசபை தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று (21-ம் தேதி) தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து தனது தேர்தல் பிரசாரத்தை துவங்குகிறார்.


அதிமுக கூட்டணி சார்பில் தென்காசி சட்டசபை தொகுதியி்ல் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று (21-ம் தேதி) காலை நெல்லை வந்து கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். காலை 11 மணிக்கு பாவூர்சத்திரம் வரும் சரத்குமாருக்கு சமக மற்று்ம் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவி்த்து பிரசாரத்தை துவங்குகிறார்.

இதைத்தொடர்ந்து சுரண்டையில் உள்ள அண்ணாத்துரை சிலை, சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். கீழப்புலியூர் முத்துராமலிங்கத் தேவர் சிலை, மேலகரம், நன்னகரத்தில் உள்ள அம்பேத்கார் சிலை, குற்றாலத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தென்காசி சட்டசபை தொகுதியில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

நாளை (22-ம் தேதி) காலை 9 மணிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் விசேஷ பூஜை செய்து வழிபடுகிறார். வரும் 23-ம் தேதி காலை தென்காசி இசக்கி மஹாலில் அதிமுக கூட்டணி கட்சியை சேர்நத செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பேசுகிறார். ஏற்பாடுகளை அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
English summary
SMK chief Sarath Kumar starts his election campaign today from Tenkasi constituency. He will be given grand reception by ADMK and SMK partymen. He will garland great leaders's statue in that area and will discuss about the campaign with the alliance parties' leaders.

காமராஜரை விட்டால் ஆள் இல்லை:""தோழர்களே

காமராஜரை விட்டால் ஆள் இல்லை:""தோழர்களே... எனக்கு 82 வயதாகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்து விடலாம். ஆனால், நீங்கள் இருப்பீர்கள். உங்களை விட வயதில் முதிர்ந்த நான், மரண வாக்குமூலம் போல ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறும் நிலையில் இருப்பவன், பொய் கூற வேண்டிய அவசியமில்லை.
""மூவேந்தர்கள், நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளையர் என நம்மை பலர் ஆண்டிருந்தும், இன்றைய காமராஜ் ஆட்சியில் தமிழகம் அடைந்துள்ள முன்னேற்றம், எப்போதும் ஏற்பட்டதில்லை. நம்மை ஆட்சி புரிந்தவர்கள் எல்லாம், கல்விக்கு என்று எதுவும் செய்யவில்லை.
""தோழர்களே... என் சொல்லை நம்புங்கள்... இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால், இன்னும் 10 ஆண்டுகளாவது, காமராஜை விட்டு விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்; அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராஜை பயன்படுத்திக்கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே கிடையாது!'(9.7.1961ல், தேவகோட்டையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், தற்போது ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் உள்ள கழகங்களுக்கு, "பிதாமகனாக' இருக்கும் ஈ.வெ.ரா., பேசியது.)