Thursday, September 1, 2011

பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்: சரத்குமார்


தமிழக அரசு கொண்டுவந்துள்ளதீர்மானத்தை மத்தியஅரசு ஏற்று பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என ச.ம.க. தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஆர்.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் மூவரின் கருணை மனு, குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்ட்டு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், இதனை மாற்றும் அதிகாரம் தமிழக முதல்வருக்கு இல்லை என்பதைத் தெளிவாக்கி சட்டப் பேரவையில் முதல்வர் தெரிவித்தார்.

இருப்பினும், மூவரது தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை சட்டப் பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றியதை ச.ம.க. சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் பாராட்டி வரவேற்கிறேன்.

தமிழகத்தில் அகதி முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக மக்களுக்கு இணையாக நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். இது இலங்கைத் தமிழர்களின் நலனில் அவரது அக்கறையையும், உண்மையான உணர்வையும் பிரதிபலிக்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழக முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு, தமிழக மக்களுக்கு இணையாக நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட வேண்டும். தென் மாவட்ட மக்கள் பயன் அடையும் வகையில், விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் வகையில் குற்றாலத்தில் நீச்சல் பயிற்சி பள்ளி அமைக்க வேண்டும். இதனை ஏழை எளிய மாணவ மாணவிகளின் நலன் கருதி, திறந்த வெளி நீச்சல் பயிற்சி பள்ளியை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.

முதல்வருக்கு சரத்குமார் பாராட்டு

சென்னை, ஆக.31:ரூ.70 கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கும் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
.
அரசு கேபிள் கார்பரேசøனை முந்தைய  திமுக அரசு  சொந்த சுயநலத்திற்காக தொடங்கினார்கள். ரூபாய் 100 கோடி சலுகை தொடங்கப்படுவதாக அறிவித்த அரசு கேபிள் கார்பரேசனை சுயநலத்தோடு அவர்களே முடக்கிவிட்டார்கள். அதனால மக்களுக்கு கிடைப்பத்õக அறிவித்த எந்த பயனும கிடைக்கவில்லை.

ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் சமயத்தில்  அறிவித்தப்படி  அரசு கேபிள் கார்பரேசனுக்குபுத்துயிர் அளித்து அதள்கென முழு நேர அதிகாரிகளையும் பிரவிற்கென்று ஒரு தலைவரையும் நியமித்து சீரமைப்பு செய்துள்ளார்கள்.இப்பொழுது முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளபடி ஒரு இணைப்புக்கு ரூபாய் 70 செலுத்தினால் போதும என்ற அறிவிப்பின் மூலம் ரூபாய் 200 வரை செலுத்தி வந்த மக்களுக்கு ரூ. 70 முதல் 130 வரை சலுகை கிடைத்திருக்கிறதுது.

முதல்கட்டமாக இலவச சேனல்களும், படிப்படியாக கட்டண சேனல்களும் கேபிள் இணைப்பு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரிதும் வரவேற்கத்தக்கதுது.வேலூர், கோவை தஞ்சாவூர் , திருநெல்வேலி ஆகிய இடங்களில் அரசு டிஜிட்டல தலைமுனையம் அமைக்கப்பட்டிருக்கிறதுது.

மற்ற இடங்களில் தலைமுனையங்களை வாடகைக்கு எடுத்துள்ள நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து அனைத்துபகுதிகளிலும் தமிழக அரசே சொந்தமாக டிஜிட்டல் தலைமுனையங்களை விரைந்து அமைத்திட முன் வரவேண்டும்.

கேபிள் தொலைக்காட்சியை எளிய கட்டணத்தில் தமிழக மக்கள் பார்ப்பதற்கு வசதி ஏற்படுத்தி கொடுத்த முதல்வருக்கு மிகுந்த பாராட்டுதல்களையும் சமக சார்பில்தெரிவித்து கொள்கிறேன்இவ்வாறு சரத்குமார் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.