சென்னை, ஆக.31:ரூ.70 கட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கும் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: | |
| . | |
அரசு கேபிள் கார்பரேசøனை முந்தைய திமுக அரசு சொந்த சுயநலத்திற்காக தொடங்கினார்கள். ரூபாய் 100 கோடி சலுகை தொடங்கப்படுவதாக அறிவித்த அரசு கேபிள் கார்பரேசனை சுயநலத்தோடு அவர்களே முடக்கிவிட்டார்கள். அதனால மக்களுக்கு கிடைப்பத்õக அறிவித்த எந்த பயனும கிடைக்கவில்லை. ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் சமயத்தில் அறிவித்தப்படி அரசு கேபிள் கார்பரேசனுக்குபுத்துயிர் அளித்து அதள்கென முழு நேர அதிகாரிகளையும் பிரவிற்கென்று ஒரு தலைவரையும் நியமித்து சீரமைப்பு செய்துள்ளார்கள்.இப்பொழுது முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளபடி ஒரு இணைப்புக்கு ரூபாய் 70 செலுத்தினால் போதும என்ற அறிவிப்பின் மூலம் ரூபாய் 200 வரை செலுத்தி வந்த மக்களுக்கு ரூ. 70 முதல் 130 வரை சலுகை கிடைத்திருக்கிறதுது. முதல்கட்டமாக இலவச சேனல்களும், படிப்படியாக கட்டண சேனல்களும் கேபிள் இணைப்பு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரிதும் வரவேற்கத்தக்கதுது.வேலூர், கோவை தஞ்சாவூர் , திருநெல்வேலி ஆகிய இடங்களில் அரசு டிஜிட்டல தலைமுனையம் அமைக்கப்பட்டிருக்கிறதுது. மற்ற இடங்களில் தலைமுனையங்களை வாடகைக்கு எடுத்துள்ள நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து அனைத்துபகுதிகளிலும் தமிழக அரசே சொந்தமாக டிஜிட்டல் தலைமுனையங்களை விரைந்து அமைத்திட முன் வரவேண்டும். கேபிள் தொலைக்காட்சியை எளிய கட்டணத்தில் தமிழக மக்கள் பார்ப்பதற்கு வசதி ஏற்படுத்தி கொடுத்த முதல்வருக்கு மிகுந்த பாராட்டுதல்களையும் சமக சார்பில்தெரிவித்து கொள்கிறேன்இவ்வாறு சரத்குமார் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. |
Thursday, September 1, 2011
முதல்வருக்கு சரத்குமார் பாராட்டு
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment