Monday, March 28, 2011

தென்காசியில் சரத்குமாரை ஆதரித்து நடிகர் மயில்சாமி பிரசாரம்

தென்காசி : சினிமா துறை உள்பட அனைத்து துறைகளிலும் கருணாநிதியின் குடும்பத்தினர் தலையீடு இருக்கிறது. இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என் தென்காசி தொகுதியி்ல் நடிகர் சரத்குமாரை ஆதரித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த காமெடி நடிகர் மயில்சாமி பிரசாரம் செய்தார்.


தென்காசியில் நடந்த பிரசாரத்தின்போது மயில்சாமி கூறுகையில்,

கருணாநிதி குடும்ப ஆட்சியை வீ்ட்டிற்கு அனுப்ப வேண்டும், சினிமா துறை மட்டுமல்லாமல் அனைத்து துறையிலும் கருணாநிதியின் குடும்ப தலையீடு இருக்கிறது. உழைத்து 500 ரூபாய் பெற்றாலும் அதற்கு கப்பம் கட்ட வேண்டியுள்ளது.

ஏமாந்தவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம்தான். அப்படி ஏமாற்றுபவர்களை விரட்டியடிக்க வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி மலரவும், மக்கள் வளமாக வாழவும், சட்டம், ஓழுங்கு சீராக இருக்கவும் ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும். அதற்கு தென்காசி தொகுதியில் சரத்குமாரை ஆதரிக்க வேண்டும்.

அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட்டு அவரை அமோகமாக வெற்றி பெறச்செய்யும்படி கேட்டு கொள்கிறேன் என்றார் மயில்சாமி.
English summary
Comedy Actor Mayilsamy has urged Tenkasi voters to vote out Karunanidhi and DMK from the rule. He was campaigning for Actor Sarath Kumar and asked the voters to make Jayalalitha CM again.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கடும் கண்டனம்

மகாகவி பாரதியாரைப் பற்றி கனிமொழி எம்பி பேசிய பேச்சுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 


பன்னாட்டு தமிழ் நடுவத்தின் 2வது தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு
உரையாற்றிய கவிஞர் கனிமொழி.


"தமிழ் மெல்லச்சாகும் என்று கூறிய பாரதிக்கு இது ஒரு அரை கூவல்
தமிழ்வாழும் அதையாராலும் அழிக்க முடியாது என்று மாணவர்கள் சூளுரை ஏற்க வேண்டும் என்று வீர உரையாற்றி இருப்பதாக வெளிவந்த பத்திரிகை செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.


பாரதியின் பாடலை பழுதுற படித்துவிட்டு, அந்த பழுத்த கவிஞன் மீது
பழிசுமத்தி இருக்கும் செயல்கண்டு நடுக்கமுற்றேன். தமிழால் பாரதி
தகுதிபெற்றதும், தமிழ் பாரதியால் தகுதிபெற்றது என தமிழ் கூறும் நல்லுலகம் ஏகோபித்த குரலால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த முண்டாசுக் கவிஞனின் பாடலை முழுமையாகப் படிக்காமல், முரணாகப் புரிந்து கொண்டு, அவன் காண விருப்பப்பட்ட புதுமைப் பெண்களுள் ஒருவரான நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பழிசுமத்தி இருப்பது, அந்த இறவாத கவிஞனை அவமானப்படுத்து வதாகும்.

பாரதி தன் பாடல்களுள் ஒன்றாக தமிழ்தாய் என்னும் தலைப்பில் தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் என்னும் உப தலைப்பில் "தாயுமாணவர் ஆனந்த் களிப்புச் சந்தமாக எழுதிய கவிதை வரிகளில் மற்ற மொழிகளுக்கு நிகரான நுட்பங்களும், மேன்மை கலைகளும் தமிழினில் இல்லை என்று தமிழ் துவேசம் கொண்ட ஒரு பேதை உரைப்பதாகவும், அந்த பெரும் பழியைத் தீர்க்க எட்டுத்திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று தமிழ்மக்களை தமிழ்த்தாய் வேண்டுவது போலவும் ஒரு கற்பனையான உரையாடலை கவிதை வரிகளாக்கினான். அப்பாடல் வரிகள் இதோ
 

"இன்னொரு சொல்லினைக் கேட்டேன் இனி
ஏது செய்வேன் எனதாருயிர் மக்காள்
கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்
புத்தம் புதிய கலைகள்பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கேஅந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லைஅவை
சொல்லுத் திறமை தமிழ் மொழிக்கில்லை
மெல்லத்தமிழினிச் சாகும்அந்த
மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்
என்றந்தப்பேதை உரைத்தான்ஆ
இந்த வசை எனக்கெய்திடலாமோ!
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்''

 

இது தான் அந்தப்பாடல்
இப்படி ஒரு பேதை தமிழை பதிக்க, அதற்கு வருந்திய தமிழ்த்தாய் தமிழ்
மக்களிடம் வேண்டுவதாக வந்த அந்த கற்பனைப் பாடலை தவறாக உள்வாங்கிக் கொண்டு, அந்த மாபெரும் தமிழ்க் கவிமீது பாய்ந்திருப்பது
அதிர்ச்சியளிக்கிறது. 


"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்குங்காணோம்'
என்றவன் பாடலை பிழையுற உணர்ந்து கொண்டு, ஒரு பெருங்கவி மீது கரும்பழி சுமத்தியிருப்பது கவலைக்குறியது. அதுவும் தொல்காப்பியப் பூங்கா தந்த முதலமைச்சரின் "தமிழ்தோட்டத்தில் பூத்த கவிஞர்' இப்படி தவறாக தமிழ்க்கவியின் மீது தகாத பொருளால் குற்றம் சுமத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.