Wednesday, April 6, 2011

ச.ம.க.வில் இணைந்த நா.ம.க. வேட்பாளர் பரமசிவன்

தென்காசி: தென்காசி தொகுதி நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் பரமசிவன் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்தார்.


தென்காசி தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சியின் சார்பில் பரமசிவன் என்பவர் போட்டியிடுகிறார். நேற்று அவரும், 100-க்கும் மேற்பட்டோரும் சேர்ந்து சமக தலைவர் சரத்குமாரை சந்தித்து நமகவில் இருந்து விலகி சமகவில் சேர்ந்தனர்.


இது குறித்து பரமசிவன் கூறியதாவது,

கட்சி தலைவர் கார்த்திக் 2 தடவை பிரசாரத்திற்கு வருவதாக கூறினார். ஆனால் அவர் வராமல் புறக்கணித்து வருகிறார். அவரை நம்பி எப்படி தேர்தலில் போட்டியிட முடியும். அதனால்தான் அக்கட்சியில் இருந்தும், தேர்தலில் இருந்தும் விலகி சமகவி்ற்கு ஆதரவு தெரிவித்து இணைந்துள்ளேன் என்றார்.
English summary
Tenkasi NMK candidate Paramasivan has resigned from the party and joined Sarathkumar's SMK. He has even withdrawn from the election to support SMK. 
 

கள் இறக்க அனுமதிக்கப்படும்: ஜெயலலிதா

பொள்ளாச்சி, ஏப்.6: அதிமுக ஆட்சிக்கு வரும்பட்சத்தில், தென்னை மற்றும் பனை தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கள் இறக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஜெயலலிதா உறுதி அளித்தார்.  பொள்ளாச்சியில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பேசியது:  தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடத்தி வரும் கருணாநிதிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அந்த வகையில், இந்தத் தேர்தலில் தமிழகத்திற்கு சுதந்திரம் பெற்றுத் தாருங்கள். ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு மின்சாரம் மிகவும் முக்கியம். ஆனால், தமிழகத்தில் மின்சார வெட்டுப் பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. மாநிலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாகிவிட்டது. எந்தத் தொழிலை எடுத்தாலும், அதில் கருணாநிதி குடும்பத்தினர் உள்ளனர். திரைப்படத் தொழில், பத்திரிகை தொழில், மணல், கிரானைட் தொழில் என எல்லா துறைகளிலும் அவரது குடும்பத்தினர் புகுந்துவிட்டனர்.  இப்போது 6-வது முறையாக முதல்வராக வேண்டும் என்று கூறி கருணாநிதி வாக்கு கேட்டு வருகிறார். மீதமிருக்கும் துறைகளையும் அபகரிக்கத்தான் மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார். தமிழக மக்கள் ஏமாந்துவிடக்கூடாது.  இலங்கைத் தமிழர் பிரச்னையில் போர் நிறுத்தம் வேண்டி திடீரென 3 மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தியவர். ஒரே நாளில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட காரணமாக இருந்தவர்.  இலங்கைத் தமிழர்கள்: மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்திருந்தால், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றிருப்போம். இலங்கைத் தமிழர்களையும் காப்பாற்றி இருப்போம். ஆனால் கருணாநிதியோ, அப்படி எதுவும் செய்யவில்லை. இலங்கைத் தமிழர்களை அழித்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொண்டவர்.  2ஜி முறைகேட்டில் முதல்வர் குடும்பத்தினருக்கு தொடர்பு உள்ளது. ஆனால், மாட்டிக் கொண்டது ஆ.ராசா; உயிரை விட்டவர் சாதிக் பாஷா.  கருணாநிதி குடும்பத்தைத் தண்டிக்கக்கூடிய சக்தி, வாக்காளர்களாகிய உங்களிடம் தான் உள்ளது. எனவே, சிந்தித்து வாக்களியுங்கள். இப்படியே போனால், தமிழகத்தை குடும்ப வசம் ஆக்கிக் கொள்வார் கருணாநிதி. அவரது குடும்பத்தை அப்புறப்படுத்த வேண்டும்.  கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு கருணாநிதியின் குடும்பம் ஊழல் புரிந்துள்ளது. எனவே, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு, திமுக போட்டியிடும் அனைத்து இடங்களிலும் டெபாசிட் இழக்கும் அளவுக்கு, அதிமுகவை வெற்றி பெறச் செய்து வரலாற்றுச் சாதனையை நீங்கள் நிகழ்த்த வேண்டும்.  இத்தொகுதியில் பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தில் ஆனைமலையாறு, நல்லாறு அணைக்கட்டு திட்டம் செயல்படுத்தப்படும். அம்பராம்பாளையம் திட்டத்தில் 294 கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  நெசவுத் தொழிலாளர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தென்னை, பனை தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கள் இறக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.  உடுமலை வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன், மடத்துக்குளம் வேட்பாளர் சி.சண்முகவேல், பொள்ளாச்சி வேட்பாளர் முத்துக்கருப்பண்ணசாமி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை (தனி) தொகுதி வேட்பாளர் எம்.ஆறுமுகம்  உள்ளிட்டோரை அறிமுகப்படுத்தி, ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.  இதுதவிர கேரள மாநிலத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் சம்பத், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட 6 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும், அவர் வாக்கு சேகரித்தார்.

ஒற்றுமையுடன், ஒருமித்து செயல்பட்டு வெல்ல வேண்டும்-சரத்குமார்


கோவை: சிறு சிறு குழப்பங்களை விளைவித்து கூட்டணியை சீர்குலைக்க முயல்கிறார்கள் எதிர்த் தரப்பினர். அதற்கு உடன்படாமல், ஒருமித்து செயல்பட்டு, ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.


கோவையில் இன்று அதிமுக கூட்டணி சார்பில் வ.உ.சி.மைதானத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சரத்குமார் பேசியதாவது...

6 நாட்களில் தேர்தல் வரப் போகிறது. இங்கு புதிய கூட்டணி உருவாகியிருக்கும்போது, புதிய உறவு மலர்ந்திருக்கும்போது, அங்கு சிறு சிறு குழப்பங்களை உருவாக்கி இதை சீர்குலைத்து விடலாமா என்று நினைத்து அது முடியாமல், போன ஏக்கம் எதிர்த் தரப்பிலே இருக்கிறது. எனவே அவர்களுக்கு இடம் கொடுத்து விடாதபடி ஒன்றுபட்டு, ஒருமித்து செயல்பட்டு வெற்றிக் கனியைத் தட்டிப் பறிக்க வேண்டும்.

இந்த ஐந்து ஆண்டு கால கருணாநிதி குடும்ப ஆட்சியில் விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு, விவசாயிகளுக்குப் பாதிப்பு, மாணவர்களுக்குப் பாதிப்பு, தொழிலாளர்களுக்குப் பாதிப்பு, தொழிற்சாலைகளுக்குப் பாதிப்பு, பொருளாதார சீர்குலைவு என பல துயரங்கள். இதற்குக் காரணம், ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி.

இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது தெள்ளத் தெளிவாகி விட்டது. இதை எப்படிச் சொல்கிறேன் என்றால் கடந்த 10 நாட்களாக நான் தென் மாவட்டங்களில், தென்காசி வேட்பாளரான நான் பிரசாரம் செய்யும்போது, எங்கு போனாலும் இரட்டை இலைச் சின்னத்தைக் காட்டி மக்கள் ஆரவாரமாக வரவேற்கிறார்கள்.

உலகிலேயே மிகப் பெரிய ஊழல் ஸ்பெக்ட்ரம் ஊழல்தான். ராசாதான் அந்த ஊழலுக்குச் சொந்தக்காரர். அந்த ஊழல் கட்சிக்குச் சொந்தக்காரர் கருணாநிதி. இருவரும் சொந்தக்காரர்கள்.

இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி ராசா சிறையில் இருக்கிறார். ஆனால் வெட்கமோ, தயக்கமோ இல்லாமல் இன்று தேர்தலை சந்திக்கிறது திமுக. இது மிகப் பெரிய அவமானம். பக்கத்து வீட்டுக்கு போலீஸ் வந்தாலே அவமானப்படுவோம் நாம். ஆனால் இவ்வளவு பெரிய ஊழலை செய்து விட்டு வெட்கமே இல்லாமல் வாக்கு கேட்க வருகிறார்கள்.

ஊழல் தொடர்பாக முதல்வரின் மனைவியை விசாரிக்கிறார்கள், மகளை விசாரிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி நடக்கிறது என்கிறார் ப.சிதம்பரம். அதை வழிமொழிகிறார் சோனியா.

இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். இதற்காக ஒன்று திரண்டு, ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்றிக் கனியைப் பறிக்க வேண்டும். மக்களை பணத்தைக் கொடுத்து ஏமாற்றி விடலாம் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது. மக்கள் ஏமாளிகள் அல்ல, ஏமாறும் நிலையில் மக்கள் இன்று இல்லை.

ஏப்ரல் 13ம் தேதி சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய நாளாக மலரப் போகிறது. இது நமக்கான தேர்தல் அல்ல, மாறாக வருங்காலத்தில் இளைய தலைமுறையினர் சிறப்பாக வாழ வித்திடும் நாளாகும்.

இளம் தலைமுறையினர் சரியான பாதையில் போக வேண்டும் என்றால் தமிழகத்தில் நல்லாட்சி மலர வேண்டும், அது புரட்சித் தலைவியின் ஆட்சியாக இருக்க வேண்டும் என்றார் சரத்குமார்.

கூட்டத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். விஜயகாந்த் மட்டும் வரவில்லை.

எங்களுக்கு சீட் முக்கியமில்லை என, சரத்குமார் பேசினார்.

அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், தென்காசி தொகுதி வேட்பாளருமான நடிகர் சரத்குமார் பேசுகையில்,
ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி வெற்றி கூட்டணி. இன்னும் 6 நாட்கள் இருக்கிறது. ஆகையால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டு வெற்றி பெற வேண்டும். கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, மின்வெட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொழிலாறர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது.
திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பது தெள்ள தெளிவாகி விட்டது. இதை எப்படி சரத்குமார் சொல்கிறார் என்றால், கடந்த 10 நாட்களாக தென் மாவட்டங்களில் தென்காசி வேட்பாளராக நின்கின்ற நான் சுற்றுப் பயணம் செய்கின்றபோது, அனைவரும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று சொல்லுகிறார்கள்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே சமத்துவ மக்கள் கட்சி திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொன்னதுடன், ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என்று தெரிவித்ததுடன், இரண்டு தொகுதிகளை ஒதுக்கினார்கள்.
வெளியே வந்தவுடன் உங்களுக்கு இரண்டு தொகுதிகள்தானா என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். திமுகவை அகற்ற வேண்டும் என்றுதான் கூட்டணி என்றும், சீட் எங்களுக்கு முக்கியமில்லை என்றும் நான் கூறினேன் என்றார்.