Sunday, March 20, 2011

தென்காசியில் சரத்குமார் போட்டி

சென்னை, மார்ச் 19-  

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார்.அதிமுக கூட்டணியில் அவரது கட்சிக்கு தென்காசி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சரத்குமாரும் எர்ணாவூர் நாராயணனும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணனை சந்தித்துப் பேசினர். 

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி க்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 இடங்களில் தென்காசியில் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து சரத்குமார்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தென்காசி, நாங்குநேரி தொகுதிகளில் அகில இந்திய சமத்துவக் கட்சி போட்டியிடுகிறது.

கட்சியின் உயர் நிலைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி தென்காசியில் நானும் (சரத்குமார்), நாங்குநேரியில் கட்சியின் தலைவர் ஏ. நாராயணனும் போட்டியிட இருக்கிறோம்.

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற எங்கள் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பாடுபடுவார்கள் என்று கூறியுள்ளார்.

லாஜிக் இல்லாத மேஜிக்


ஜாதியை மறந்து ஓட்டு:நாடார் இளைஞர் பேரவை அறிவிப்பு

மதுரை:"அனைத்து தொகுதிகளிலும் ஜாதியை மறந்து, யார் வல்லவர், நல்லவர் என்பதை அறிந்து ஓட்டளிப்பது' என்று, நாடார் இளைஞர் பேரவை முடிவு செய்துள்ளது.இப்பேரவையின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் நேற்று, பொதுச் செயலர் வி.என். ராஜசேகரன் தலைமையில் நடந்தது.
கூட்ட முடிவுகள் குறித்து, அவர் கூறியதாவது:பெருந்தலைவர் மக்கள் கட்சியினர், அனைத்து நாடார் சங்கங்களையும் அழைத்துப் பேசி, தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுத்ததாகக் கூறியுள்ளனர். ஆனால், எங்களை அழைக்கவில்லை. மறுநாள் என்னை தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டனர். எங்களிடம் கலந்து ஆலோசிக்காத போது, ஆதரவு கேட்பது என்ன நியாயம்?எங்களையும் அழைத்தால் "சீட்' பிரச்னை எழும் என கருதியே, புறக்கணித்துள்ளனர். அக்கட்சி நிர்வாகிகள் சிலர் சுயநலமிக்கவர்கள். இதன் காரணமாக, அனைத்து தொகுதிகளிலும் யார் வல்லவர், நல்லவர் என்பதை அறிந்து, ஜாதியை மறந்து, ஓட்டளிப்பது என தீர்மானித்துள்ளோம். மாற்று கட்சிகள் ஆதரவு கேட்கும்பட்சத்தில், பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு ராஜசேகரன் கூறினார்.பொருளாளர் பால்பாண்டி, துணை செயலர் அருண், நகர் தலைவர் சிவபாலன், செயலர் திருப்பதி, தங்கராஜ் உடனிருந்தனர்.