Tuesday, December 27, 2011

பழவேற்காடு படகு விபத்து: சரத்குமார் இரங்கல்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பழவேற்காடு படகு விபத்தில் 21 பேர் பலியான செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் கும்மிடிப்பூண்டி நகர துணை செயலர் பாண்டியனும் உயிரிழந்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.