தென்காசி: தென்காசி எம்எல்ஏ சரத்குமார் தென்காசி அரசு மருத்துவமனைக்கு
பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க முயற்சி எடுத்து வருகிறார். சிறுநீரக
நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 லட்ச ரூபாய் செலவில் நடமாடும்
டயாலிசிஸ் இயந்திரத்தை தென்காசி அரசு மருத்துவமனைக்கு வழங்கினார். மேலும்
படுக்கைகள், மின் விசிறி, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவற்றை
வழங்கியுள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகள்
சுகாதாரமாக இருக்கும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் 15 லட்ச ரூபாய்
செலவில் பூங்கா ஒன்றும் அமைத்து வருகிறார்.
இந்த பூங்காவில் செடி வைத்து அது மரமாக வளரும் வகை காத்திருக்க முடியாது என்பதால் மரமாகவே கொண்டு வந்து நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நடப்படுகிறது. இதே போன்று இ டாய்லட் எனப்படும் எலக்ட்ரானிக் கழிப்பறை வசதியையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த வசதிகள் அனைத்தையும் அரசிடம் கோரிக்கை வைத்து அதற்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்காமல் தனது சொந்த செலவில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.