Sunday, September 18, 2011

தி.மு.க.‌வினரு‌க்கு ம‌ண் ‌‌மீதுதா‌ன் ஆசை - சரத்குமார் கு‌ற்ற‌ம்சா‌ற்று

''ி.ு.க.வினருக்கதமிழமணமீதுதானஆசை. அதனால்தானநிலப்பறிப்பவழக்குகளிலசிக்கி வருகிறார்கள்'' எ‌ன்று அ‌கில இ‌ந்‌திய சம‌த்துவ ம‌க்க‌ள் க‌‌ட்‌சி‌த் தலைவ‌ர் சர‌‌த்குமா‌ர் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் நடைப‌ெ‌ற்ற சமத்துமக்களகட்சியின் 4வதஆண்டவிழா‌வி‌ல் கல‌ந்து கொ‌ண்டு பே‌சியபோது இதனை அவ‌ர் த‌ெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கடந்த 5 ஆண்டுகளிலூ.1.76 லட்சமகோடி ஊழலசெய்ததுதானி.ு.க. செய்சாதனை எ‌ன்று சர‌த்குமா‌ர் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

அண்ணஹசாரேவினஊழலஎதிரிப்பபிரசார‌த்தை வரவே‌ற்ற சர‌த்குமா‌ர், அதநேரத்திலஅரசியலசட்டத்தமாற்வேண்டுமஎன்பதஏற்றுககொள்முடியாது எ‌ன்றா‌ர்.

சட்டப்பேரவைக்கி.ு.க. உறுப்பினர்களதிருக்குறளகேட்டுவிட்டதிரும்பி சென்றவிடுவது அவர்களதேர்ந்தெடுத்மக்களுக்கசெய்யுமதுரோகம் எ‌ன்று கூ‌றிய சர‌த்குமா‌ர். ி.ு.க.வினருக்கதமிழமணமீதுதானஆசை. அதனால்தானநிலப்பறிப்பவழக்குகளிலசிக்கி வருகிறார்கள் எ‌ன்றா‌ர்.

திருமங்கலமஇடைததேர்தலிலபணத்தினமூலமவெற்றி பெற்ு.க. அழகிரி இன்றஎங்கிருக்கிறார் எ‌ன்று சர‌த்குமா‌ர் ‌வினா எழு‌ப்‌பினா‌ர்.

முதலமை‌ச்ச‌ர் ஜெயலலிததலைமையிலநடந்தவருமநல்லாட்சிக்கசமத்துமக்களகட்சி தூணாஇருந்தவருகிறது எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றினா‌ர்.

மக்களுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் துரோகம்: சரத்குமார்

சென்னை, செப். 18: சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் பங்கேற்காததன் மூலம் திமுக எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கு துரோகம் செய்கின்றனர் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார்.சமத்தும மக்கள் கட்சியின் 4-வது ஆண்டு விழா, சென்னை கந்தன்சாவடியில் சனிக்கிழமை நடந்தது. இதில் கலந்து கொண்ட சரத்குமார் பேசியது:கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்ததுதான் தி.மு.க. செய்த சாதனை. அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிரிப்பு பிரசாரம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.சட்டப்பேரவைக்கு தி.மு.க. உறுப்பினர்கள் வருகிறார்கள். திருக்குறள் கேட்டுவிட்டு திரும்பி சென்று விடுகின்றனர். இது அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் துரோகம். தி.மு.க.வினருக்கு தமிழ் மண் மீதுதான் ஆசை. அதனால்தான் நிலப்பறிப்பு வழக்குகளில் சிக்கி வருகிறார்கள். திருமங்கலம் இடைத் தேர்தலில் பணத்தின் மூலம் வெற்றி பெற்ற மு.க. அழகிரி இன்று எங்கிருக்கிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்து வரும் நல்லாட்சிக்கு சமத்துவ மக்கள் கட்சி தூணாக இருந்து வருகிறது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி வருகிறார்.ராஜபட்சேவுடன் சேர்ந்து கொண்டு இந்திய இறையாண்மைக்கு சீனா அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்திய இறையாண்மையைக் காப்பாற்ற கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றார் சரத்குமார்.நிகழ்ச்சியில் தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். கட்சியின் துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ., தென்சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் கே.ஜே.நாதன், அவைத்தலைவர் வி.செல்வராஜ், பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், துணைப் பொதுச் செயலாளர்கள் சுந்தரேசன், மணிமாறன், சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மோடிக்கு சரத்குமார் வாழ்த்து

சென்னை,செப்.17:குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
.
குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திரமோடிக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.மேலும் அவர் மேற்கொள்ள இருக் கும் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்தார். நரேந்திரமோடி மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்தார்.

இவ்வாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் ச.ம.க. வேட்பாளர் 3 நாளில் அறிவிப்பு

சென்னை: உயர்மட்டக் குழு கூடி 3 நாட்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல்  வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்  கூறினார்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நிகழ்ச்சி சென்னை கந்தன்சாவடியில் நேற்று நடந்தது. தமிழ கம் முழுவதிலும் 2500க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு செய்தனர். அவர்களுடன் சரத்குமார் நேற்று நேர்காணல் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிடுவோம். கூட்டணி தர்மபடி நடந்து கொள்வோம். தமிழக அளவில் விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி யில் எத்தனை இடம் தருகிறார்களோ, அந்த இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம். உயர்மட்டக் குழு கூடி 3 நாட்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளர் விவரம் வெளியிடப்படும்.  இவ்வாறு சரத்குமார் கூறினார்.
பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் நாதன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிர காஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.