''தி.மு.க.வினருக்கு தமிழ் மண் மீதுதான் ஆசை. அதனால்தான் நிலப்பறிப்பு வழக்குகளில் சிக்கி வருகிறார்கள்'' என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் குற்றம்சாற்றியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சமத்தும மக்கள் கட்சியின் 4வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்ததுதான் தி.மு.க. செய்த சாதனை என்று சரத்குமார் குற்றம்சாற்றினார்.
அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிரிப்பு பிரசாரத்தை வரவேற்ற சரத்குமார், அதே நேரத்தில் அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
சட்டப்பேரவைக்கு தி.மு.க. உறுப்பினர்கள் திருக்குறள் கேட்டுவிட்டு திரும்பி சென்று விடுவது அவர்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் துரோகம் என்று கூறிய சரத்குமார். தி.மு.க.வினருக்கு தமிழ் மண் மீதுதான் ஆசை. அதனால்தான் நிலப்பறிப்பு வழக்குகளில் சிக்கி வருகிறார்கள் என்றார்.
திருமங்கலம் இடைத் தேர்தலில் பணத்தின் மூலம் வெற்றி பெற்ற மு.க. அழகிரி இன்று எங்கிருக்கிறார் என்று சரத்குமார் வினா எழுப்பினார்.
முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் நடந்து வரும் நல்லாட்சிக்கு சமத்துவ மக்கள் கட்சி தூணாக இருந்து வருகிறது என்று சரத்குமார் கூறினார்.

No comments:
Post a Comment