Sunday, September 18, 2011

உள்ளாட்சி தேர்தல் ச.ம.க. வேட்பாளர் 3 நாளில் அறிவிப்பு

சென்னை: உயர்மட்டக் குழு கூடி 3 நாட்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல்  வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்  கூறினார்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நிகழ்ச்சி சென்னை கந்தன்சாவடியில் நேற்று நடந்தது. தமிழ கம் முழுவதிலும் 2500க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு செய்தனர். அவர்களுடன் சரத்குமார் நேற்று நேர்காணல் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிடுவோம். கூட்டணி தர்மபடி நடந்து கொள்வோம். தமிழக அளவில் விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி யில் எத்தனை இடம் தருகிறார்களோ, அந்த இடங்களில் நாங்கள் போட்டியிடுவோம். உயர்மட்டக் குழு கூடி 3 நாட்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பா ளர் விவரம் வெளியிடப்படும்.  இவ்வாறு சரத்குமார் கூறினார்.
பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தென்சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் நாதன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிர காஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment