அதிமுக ஆதரவுடன் வெற்றி பெற்ற 29 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் தயாரா என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்எல்ஏ சவால் விடுத்துள்ளார்.
.
சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளரை பெறும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவர் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.முத்துச்செல்வியை ஆதரித்து அமைச்சர் கே.டி.பச்சமால் தலைமையில் சேர்ந்தமரம் பகுதியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசும் போது, தமிழக மக்கள் தமிழகத்தில் நடைபெற்ற ஊழல் ஆட்சியை ஒழித்துக் கட்டி ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தீர்கள். அதற்காக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக ஒரே ஊழலில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்து உலக சாதனை படைத்ததோடு அவர்களின் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா இன்றும் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தும் அவர்கள் உங்களிடம் ஓட்டு கேட்க வருகின்றனர்.
மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு முழு காரணமே திமுக அரசுதான். திமுக ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழிற்சாலை தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள்.
ஆனால் அந்த தொழிற்சாலை தொடங்குவதற்கு மின்சாரம் தேவை என்பதை சிறிதும் சிந்திக்காமல் எந்தவித திட்டமிடலும், தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் செயல்பட்டதுதான் இந்த மின்பற்றாக் குறைக்கு காரணம். மேலும் திமுக ஆட்சியின் போது வடசென்னையில் உள்ள அனல் மின் நிலையமும், தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்திலும் சரியான முறையில் பராமரிக்காமல் உற்பத்தி குறைவானது.
முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் திமுக அரசு விட்டுச் சென்ற 1 லட்சம் கோடி கடனையும் சுமந்து கொண்டு பாராமுகமாக இருக்கும் மத்திய அரசின் நிதியுதவியும் இல்லாமல் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக கொண்டு வரவும் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக உழைத்து வருகிறார். மின் தட்டுப்பாட்டை போக்குவதற்காக அனல் மின் நிலையங்களை பராமரிக்கவும், உடன்குடி அனல் மின் நிலைய
திட்டத்தை கொண்டு வரவும் துரித நடவடிக்கை எடுத்து வருகிறார். அத்துடன் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறார்.
இன்றைக்கு அதிமுக ஆதரவுடன் 29 எம்எல்ஏக்களை பெற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கவர்னர் ஆட்சி வந்தால் தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறுகிறார். நான் கேட்கிறேன். 29 எம்எல்ஏக்களை நீங்கள் அதிமுக ஆதரவுடன்தான் பெற்றுள்ளீர்கள். முதலில் 29 பேரும் ராஜினாமா செய்து விட்டு தனியாக போட்டியிட்டு ஜெயித்து காட்டுங்கள்.
தமிழக மக்களுக்காக உழைத்து வரும் முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் முத்துச்செல்வியை அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற இரட்டை இலை சின்னத்தில் அனைவரும் வாக்களியுங்கள் என்று பேசினார்.இக் கூட்டத்தில் அமைச்சர் ராஜா செந்தூர்பாண்டி, சமத்துவ மக்கள் கட்சி துணைத் தலைவர் ஏ.நாராயணன் எம்எல்ஏ, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயபிரகாஷ், இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் ராயப்பன், அதிமுக ஒன்றிய செயலாளர் முருகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சரத்குமார் எம்எல்ஏ இன்று சங்கரன்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட தளவாய்புரம், செந்தட்டி, வேப்பங்குளம், நெடுங்குளம், நெசவாளர் காலனி, என்ஜிஓ காலனி, புளியப்பட்டி ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர் முத்துச் செல்விக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரித்தார்.