Friday, April 15, 2011

சாத்தன்குளம் , நாசரேத் பகுதிகளில் சரத்குமார்

சாத்தன்குளம் , நாசரேத் பகுதிகளில் சரத்குமார் அவர்கள் பிரசாரத்தின் போது எடுக்கப்பட்ட  படம்..
காங்கிரஸ் வேட்பாளர்களை திமுகவே தோற்கடிக்கும். சரத்குமார்.
ரபரப்பான தேர்தல் களத்தில், அ.தி.மு.க. கூட்டணியில் ‘அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி’க்கு இரண்டு இடங்கள்.  எண்ணிக்கை திருப்தியா? அக்கட்சியின் தலைவர்  நடிகர் சரத்குமாரிடம் பேசினோம்.
திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்திருக்கிறீர்களே?

‘‘இல்லையே. நீண்ட நாட்கள் திட்டமிட்டு, பேச்சுவார்த்தை நடத்தித்தான் சேர்ந்திருக்கிறோம். சொல்லப்போனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே அ.தி.மு.க.வுடன்தான்  எங்களது கூட்டணி என்பதை நான் அறிவித்திருக்கிறேன்.’’

அரசியலில் விஜயகாந்த்துக்கு ‘சீனியர்’ நீங்கள். அவரது கட்சிக்கு 41 தொகுதிகள். ஆனால், உங்களுக்கு இரண்டு இடங்கள். சங்கடமாக இல்லையா?

‘‘இப்போது தொகுதிகளின் எண்ணிக்கை முக்கியமில்லை. தி.மு.க.வை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். அதுதான் குறிக்கோள். இப்படி ஒரு பொதுவான குறிக்கோளை  எட்ட வேண்டுமானால் ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஒன்று சேர்ந்தால்தான் முடியும்.’’

பல்வேறு நாடார் சங்கங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ‘பெருந்தலைவர் காமராஜர் கட்சி’த் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட நீங்கள், அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த  மறுநாளே அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டீர்களே?
‘‘பொதுவாக தேர்தல் வரும்போதெல்லாம் பல்வேறு நாடார் சங்கங்கள் தங்களுக்கென ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்வது உண்டு. அப்படித்தான் இம்முறையும் என்னை  அணுகிய அச்சங்கங்களின் நிர்வாகிகள் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் ஒரு கட்சி ஆரம்பிப்பதற்கும், அங்கீகாரம் பெறுவதற்கும் நிறைய  நடைமுறைகள் உண்டு. இவற்றில் எதையுமே அந்த நிர்வாகிகள் கண்டு கொள்ளவில்லை. மாறாக,  எங்களது ‘சமத்துவ மக்கள் கட்சி’யை அழிக்கவும் முயன்றார்கள். அந் தக் குறுகிய எண்ணத்தின் பின்னணியில் பிரபல தொழிலதிபர் ஒருவரும் இருந்தார் என்பது எனக்குத் தெரிய வந்தது. அதனால் சுதாரித்துக் கொண்டேன்.’’

தி.மு.க.வோடு, காங்கிரஸ் மீண்டும் இணைந்திருப்பதால், அக்கூட்டணி பலம் வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறதே?

‘‘எந்தக் காரணங்களின் அடிப்படையில் காங்கிரஸ் மீண்டும் தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறது என்பதை நாடே அறியும். மூன்று தொகுதிகள் அதிகம் வேண்டும் என்பத ல்ல பிரச்னை. ‘ஊழலுக்கு ஆதரவுக் கரம் நீட்டினால் அதிக இடங்கள் தருவோம்’ என்கிற ஒப்பந்தம் இரு கட்சிக்கும் இடையே போடப்பட்டிருக்கலாம். அப்படியே மீண் டும் இணைந்தாலும், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வேலை செய்ய, வாக்களிக்க வேண்டாம் என்று தனது கட்சியினருக்கு தி.மு.க. கட்டளையிடாது என்பது என்ன  நிச்சயம்? இதனால் குழப்பம்தான் உருவாகும். அப்படியிருக்க, அந்தக் கூட்டணி பலம் வாய்ந்தது என்று எப்படிச் சொல்லமுடியும்?’’



தென்காசியில் ரத்ததான முகாமை ஏப்ரல் 15 2011 சரத்குமார் துவக்கி வைத்தார்


ஏப்ரல் 15 தென்காசி : தென்காசியில் நடந்த ரத்ததான முகாமை சரத்குமார் துவக்கி வைத்தார். தென்காசி கே.பி.ஆஸ்பத்திரியில் கே.பி.அறக்கட்டளை, மின்வாரிய அம்பேத்கர் பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள், பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமை ச.ம.க.தலைவர் சரத்குமார் துவக்கி வைத்தார். டாக்டர் சங்கரகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் செந்தூர் பாண்டியன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் மாடசாமி பாண்டியன், குற்றாலம் செயலாளர் குமார் பாண்டியன், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணை செயலாளர் வி.பி.மூர்த்தி, தென்காசி நகர செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சங்கரபாண்டியன், செல்லப்பன், கலை இலக்கிய அணி சாந்தசீலன், மயில்ராஜ், மின்வாரியம் கே.பி.எம்.துரை, நெல்லை முகிலன், ச.ம.க.மாநில நிர்வாகி காளிதாசன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை, ஒன்றிய செயலாளர் மிராசு, இந்திய கம்யூ., செயலாளர் செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூ., பால்ராஜ், புதிய தமிழகம் சந்திரன், மின்வாரிய அம்பேத்கர் பணியாளர்கள் சங்க மாநில இணை செயலாளர் முத்துக்குமார், மாரியப்பன், சசிகுமார், ஸ்டீபன் மைக்கேல்ராஜ், பீர்முகம்மது, அறக்கட்டளை தலைவர் கந்தசாமி, பீர்முகம்மது, ரெட்கிராஸ் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.