சென்னை : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர் குடும்பங்களுக்கு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் அவைத் தலைவர் செல்வராஜ், பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் ஆகியோர் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பார்கள். மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் உதவித் தொகையாக வழங்குவார்கள்.
Thursday, September 15, 2011
துப்பாக்கிச் சூடு : சரத்குமார் நிதி உதவி!
மத்திய அரசுக்கு சரத்குமார் கோரிக்கை!
சென்னை : அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு தொழில்நுட்பத்துடன் அணுமின் நிலையத்தை மத்திய அரசு அமைத்து வருகிறது. அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று வசிப்பிடம், அவர்களுக்கு இழப்பீடு, தொழில் வேலைவாய்ப்பு, பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற எந்த முன் நடவடிக்கையும் எடுக்காமல், அணு உற்பத்தியை தொடங்க நினைப்பது தவறானது. எனவே, கூடங்குளம் அணுமின் உற்பத்தியை நிறுத்தி வைத்து, அப்பகுதி மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்

சரத்குமார் குற்றச்சாட்டு ரயில் விபத்துக்கு காரணம் நிர்வாகத்தின் கவனமின்மையே
சென்னை : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கை: அரக்கோணம் அருகே மேல்பாக்கம் சித்தேரியில் நேற்று முன்தினம் நடந்த ரயில் விபத்து மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. சிக்னலுக்காக நின்றுக் கொண்டிருந்த ரயிலை, அதே பாதையில் வந்து கொண்டிருந்த மின்சார ரயில் இடித்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதை பார்க்கும்போது, ரயில்வே நிர்வாகத்தின் கவனமின்மையே காரணம் என்று தெளிவாக தெரிகிறது.
ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பயணிகளுக்கு சவுகரியமான பயணத்தையும், இதுபோன்ற விபத்துக்களிலிருந்து பாதுகாப்பையும் அளிக்க வேண்டியது, ரயில்வே நிர்வாகத்தின் முழு பொறுப்பும் கடைமையாகும். இந்த கோர விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Subscribe to:
Comments (Atom)