Tuesday, June 28, 2011

சரத்குமார் திருமண வாழ்த்து

சென்னை, ஜூன்.28:

தமிழக சட்டத்துறை அமைச்சர்  இசக்கி சுப்பையா தங்கை மகள்  டி.ராஜேஸ்வரிஎம்.சுரேந்தர் என்கிற சுரேன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அகில இந்திய சமத்துவமக்கள் கட்சி தலைவரும் தென்காசிதொகுதி எம்எல்ஏவுமான ஆர்.சரத்குமார்,  அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் நேரில் சென்று மண மக்களை வாழ்த்தினார்கள்.
.
தமிழக சட்டத்துறை அமைச்சர்  இசக்கி சுப்பையா தங்கை டி.மகேஸ்வரி பி.திருமலைகுமார் தம்பதியரின் மகள் டி.ராஜேஸ்வரி, திருவொற்றியூர் சுரேன் ஸ்டீல் உரிமையாளர் எஸ். முருகேசன்எம்.ஜெயலட்சுமி தம்பதியரின் மகன் எம்.சுரேந்தர் என்கிற
சுரேன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை அரும்பாக்கம் 100 அடி  சாலையில் உள்ள ஐஸ்வர்யா
மஹாலில் நடைபெற்றது.  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவரும், தென்காசி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.சரத்குமார், அவரது மனைவி
ராதிகா சரத்குமார், அமைச்சர் இசக்கி சுப்பையா ஆகியோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

சரத்குமாருடன் சமத்துவ மக்கள் கட்சி துணை தலைவர் ஏ.நாராயணன் எம்எல்ஏ, பொது செயலாளர் கரு.நாகராஜன், தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் அமுதன், நிர்வாகிகள் ஆதித்தன், முருகானந்தம், சைதை மூர்த்தி, பெருமாள் உள்ளிட்டோரும் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளர் ராதாரவி, திரைப்பட தயாரிப்பாளர் ராம்
குமார், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், சந்தானபாரதி, நடிகர்கள் பிரபு, விக்ரம், பரத், ஜெயம்ரவி, அருண்பாண்டியன் எம்எல்ஏ, விவேக், சக்தி  மற்றும் முன்னாள் எம்.பி.மலைச்சாமி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.  

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் தந்தையும், குற்றாலம் இசக்கி ஹைவே ரிசார்ட்ஸ் தலைவருமான இசக்கி பாண்டியன், அமைச்சரின் அண்ணன் இசக்கி சுந்தர், மற்றும் எஸ்.வேலாயுதம், சதீஷ், முல்லை ராஜா, சுரேஷ், மைக்கேல் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து மணமகன் இல்லம் சார்பில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 30ந்தேதி அன்று மாலையில்  மாதவரம் ராம்லட்சுமி பேரடைஸில் நடைபெறுகிறது. 

முதல்வருடன் சரத்குமார் சந்திப்பு

சென்னை, ஜூன்.28: 

இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், மயில்சாமி, நடிகைகள் மனோரமா, குயிலி உள்ளிட்டோர் இன்று சந்தித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது:  தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்தோம். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்தோம். 

இலங்கை அரசு மீது மத்திய அரசு உடனே பொருளாதார தடையை விதிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகள் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை முதல்வரிடம் கேட்டோம்.மேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை தருமாறு முதல்வரிடம் வலியுறுத்தினோம். இப்போது பல்வேறு பணிகள் இருப்பதால், பாராட்டு விழாவை பிறகு நடத்தலாம் என்று அவர் கூறினார்.

கடந்த ஆட்சியில் சென்னையை அடுத்து பையனூரில் சினிமா தொழிலாளர்கள் வீடு கட்ட 7 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த இடம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தில் சினிமா தொழிலாளர்கள் வீடு கட்ட முன்பணம் தர மறுக்கிறார்கள். அதனால் சொந்தமாகவே எங்களுக்கு நிலம் தர வேண்டுமென முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று சரத்குமார் கூறினார்.