Wednesday, March 23, 2011

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சரத்குமார் நடந்தே வாக்கு சேகரித்தது அனைவரையும் கவர்ந்தது.

தென்காசி: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தென்காசியில் இன்று கொளுத்தும் வெயிலைப் பொருட்படுத்தாமல் வீடு, வீடாக, கடை, கடையாக ஏறி பிரசாரம் செய்தது அனைவரையும் கவர்ந்தது.


அதிமுக கூட்டணியில் சரத்குமார் கட்சி நாங்குநேரி மற்றும் தென்காசியில் போட்டியிடுகிறது. இரண்டிலும் இரட்டை இலையில் சரத் கட்சி போட்டியிடுகிறது. இதில் தென்காசியில் சரத்குமார் போட்டியிடுகிறார்.

ஸ்டார் வேட்பாளராக இருந்தபோதும் படு எளிமையாக பிரசாரத்தைத் தொடங்கி விட்டார் சரத்குமார். இன்று அவர் தென்காசியில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். வேன் ஸ்டாண்ட் பகுதியில் வீடு வீடாக, கடை, கடையாக ஏறி அவர் பிரசாரம் செய்தார்.

50 பேர் புடை சூழ நடந்தே வாக்கு சேகரித்த சரத்குமாரைப் பார்த்து அப்பகுதியில் வியப்படைந்தனர். வழக்கமாக சாதாரண வேட்பாளர்கள்தான் நடந்து சென்று வாக்கு சேகரிப்பார்கள். சரத்குமார் போன்ற விஐபி வேட்பாளர்கள் வேன்களில்தான் பயணம் செய்வது வழக்கம்.

ஆனால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சரத்குமார் நடந்தே வாக்கு சேகரித்தது அனைவரையும் கவர்ந்தது.

அந்த வழியாக நடந்து சென்றவர்கள், பஸ்களில் சென்றவர்கள் என ஒருவரையும் விடாமல் கை குலுக்கி உங்களது சின்னம் இரட்டை இலை என்று சரத்குமார் ஓட்டு வேட்டையாடியது வித்தியாசமாக இருந்தது.

Actor Sarath Kumar campaigned in Tenkasi today. He deserted the van and choosed to walk and garnered the voters from passerby in Van stand area in Tenkasi.



Refer: http://thatstamil.oneindia.in/news/2011/03/23/sarath-kumar-walking-campaign-tenkasi-aid0091.html

தமிழகம் திருச்செந்தூர் கோயிலில் சரத்குமார்





திருச்செந்தூர்,மார்ச் 22:
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் திருச்செந்தூர் கோயிலில் செவ்வாய்க்கிழமை சத்ரு சம்ஹார யாகம் நடத்தினார்.  திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மனைவி ராதிகாவுடன் வருகை தந்தார்.  
பின்னர் கோயிலில் முதல் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்ஹாரமூர்த்தி சந்நிதியில் சத்ருசம்ஹார மூர்த்தி யாகம் நடத்தினார்.  அதன் பின் ஸ்ரீசம்ஹாரமூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்றது.  
சரத்குமார் சுவாமி தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களிடம் கூறுகையில் பொதுமக்கள் நலன் கருதி இந்த யாகத்தை நடத்தியதாகக் கூறினார்.