திருச்செந்தூர்,மார்ச் 22:
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் திருச்செந்தூர் கோயிலில் செவ்வாய்க்கிழமை சத்ரு சம்ஹார யாகம் நடத்தினார். திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மனைவி ராதிகாவுடன் வருகை தந்தார்.
பின்னர் கோயிலில் முதல் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்ஹாரமூர்த்தி சந்நிதியில் சத்ருசம்ஹார மூர்த்தி யாகம் நடத்தினார். அதன் பின் ஸ்ரீசம்ஹாரமூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்றது.
சரத்குமார் சுவாமி தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களிடம் கூறுகையில் பொதுமக்கள் நலன் கருதி இந்த யாகத்தை நடத்தியதாகக் கூறினார்.

No comments:
Post a Comment