Tuesday, May 24, 2011

சமக., நன்றி தெரிவிக்கும் விழா

கோவில்பட்டி : கோவில்பட்டியில் அஇசமக சார்பில் அதிமுக கூட்டணி வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது.
கோவில்பட்டி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் சட்டசபை தேர்தலில் சமக மற்றும் அதிமுக கூட்டணி வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. கோவில்பட்டி கடலைக்காரத்தெரு சந்திப்பில் நடந்த விழாவிற்கு சமக நகர செயலாளர் பரமசிவம் தலைமை வகித்தார். தொடர்ந்து சமக சார்பில் போட்டியிட்டு தென்காசி தொகுதியில் வெற்றி பெற்ற கட்சித்தலைவர் சரத்துகுமார், நான்குனேரி தொகுதியில் வெற்றி பெற்ற எர்ணாவூர் நாராயணன் ஆகியோருக்கும், கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தும், வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் பலர் பேசினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் முத்துகணேஷ், நகர இளைஞரணி காமராஜ், நகர துணை செயலாளர் ரமேஷ், பொருளாளர் ஜெயமணி, வர்த்தக அணி வெற்றி, சோலைநாராயணன், தொண்டரணி தனபால், வார்டு செயலாளர்கள் பெரியசாமி, தங்கராஜ், தேவகனி, கணபதி, கண்ணன், சரவணன், சந்தனராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி : தின மலர் 

தென்காசி தொகுதியில் 28ம் தேதிஎம்.எல்.ஏ.சரத்குமார் நன்றி அறிவிப்பு


தென்காசி:தென்காசி தொகுதியில் எம்.எல்.ஏ.சரத்குமார் வரும் 28ம் தேதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.தென்காசி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக ச.ம.க.தலைவர் சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரத்குமார் வெற்றி பெற்ற பின்னர் முதன் முதலாக வரும் 28ம் தேதிதென்காசி தொகுதிக்கு வந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். ஜூன் 1ம் தேதி வரை தென்காசி தொகுதியில் சுற்று பயணம் செய்து சரத்குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

இதில் விடுபட்டு போன பகுதிகளுக்கு சட்டசபை கூட்ட தொடர் முடிந்த பின்னர் சரத்குமார் சுற்று பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறார். தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும், திட்டங்களையும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒப்புதலோடு அனைத்தையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என எம்.எல்.ஏ.சரத்குமார் கூறினார்.
நன்றி : தின மலர்