Tuesday, May 24, 2011

தென்காசி தொகுதியில் 28ம் தேதிஎம்.எல்.ஏ.சரத்குமார் நன்றி அறிவிப்பு


தென்காசி:தென்காசி தொகுதியில் எம்.எல்.ஏ.சரத்குமார் வரும் 28ம் தேதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.தென்காசி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக ச.ம.க.தலைவர் சரத்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரத்குமார் வெற்றி பெற்ற பின்னர் முதன் முதலாக வரும் 28ம் தேதிதென்காசி தொகுதிக்கு வந்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். ஜூன் 1ம் தேதி வரை தென்காசி தொகுதியில் சுற்று பயணம் செய்து சரத்குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

இதில் விடுபட்டு போன பகுதிகளுக்கு சட்டசபை கூட்ட தொடர் முடிந்த பின்னர் சரத்குமார் சுற்று பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி கூறுகிறார். தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையும், திட்டங்களையும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் தெரிவித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒப்புதலோடு அனைத்தையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என எம்.எல்.ஏ.சரத்குமார் கூறினார்.
நன்றி : தின மலர் 

No comments:

Post a Comment