Friday, April 29, 2011

தொழிற்சங்க இயக்கங்களில் அரசியல் பேதம் கூடாது: ஆர்.சரத்குமார்

சென்னை, ஏப்.29: தொழிற்சங்க இயக்கங்களில் அரசியல் பேதங்கள் தலைகாட்ட விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று மே தின வாழ்த்து செய்தியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் கூறியுள்ளார்.  இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  தொழிலாளர்களுக்கும் அனைத்து அடிப்படை உரிமைகளையும், வாழ்க்கை தரம் உயரும் வகையில் நியாயமான ஊதியத்தையும் பெற்றுத் தர மே நன்னாளில் உறுதியேற்போம்.  மேலும், தொழிற்சங்க ஒற்றுமைக்குப் பாடுபடுவதுடன், தொழிற்சங்க இயக்கங்களில் கட்சி அரசியல் பேதங்கள் தலைகாட்ட விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


நன்றி : தின மணி