Thursday, August 4, 2011

தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் விதமாகத் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது -தலைவர் சரத்குமார்


 தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சிகள் வரவேற்றுள்ளன

சரத்குமார்: 2012 ஆகஸ்ட் மாதத்திலிருந்து தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என்ற அறிவிப்பு நமது மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வழிவகுக்கும். முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பதாகவும், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் விதமாகத் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை :சமச்சீர் கல்வியை தமிழ்நாட்டில் கொண்டு வருவதை பெரும்பாலோர் வரவேற்றார்கள். திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டு வர திட்டங்கள் தீட்டப்பட்டபோது இரு வேறு கருத்துக்கள் நிலவின. சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் முன்பு அனைத்து பள்ளிகளின் பாடங்கள் ஒரே மாதிரியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பள்ளியின் கட்டமைப்பு, அடிப்படை தேவைகள், போதுமான ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தோம்.

சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் மாணவர்களின் எதிர்கால உயர் கல்விக்கு ஏற்ப தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் புதிய குழுவை அமைத்து தேவையான நடவடிக்கையை முதல்வர் எடுத்து வருகிறார். சமச்சீர் கல்வி பிரச்னையை அரசியல் ஆக்கப் பார்க்கிறார்கள். மாணவர்களைக் கூட போராட்டத்தில் ஈடுபட தூண்டி விடுகிறார்கள். கல்வியோடு விளையாடி சமச்சீர் கல்வி பிரச்னையை வெறும் அரசியலாக்க வேண்டாம். உரிய நடவடிக்கைகளை முதல்வர் எடுப்பார். இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.