Thursday, September 15, 2011

சரத்குமார் குற்றச்சாட்டு ரயில் விபத்துக்கு காரணம் நிர்வாகத்தின் கவனமின்மையே

சென்னை : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கை: அரக்கோணம் அருகே மேல்பாக்கம் சித்தேரியில் நேற்று முன்தினம் நடந்த ரயில் விபத்து மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. சிக்னலுக்காக நின்றுக் கொண்டிருந்த ரயிலை, அதே பாதையில் வந்து கொண்டிருந்த மின்சார ரயில் இடித்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதை பார்க்கும்போது, ரயில்வே நிர்வாகத்தின் கவனமின்மையே காரணம் என்று தெளிவாக தெரிகிறது.

ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பயணிகளுக்கு சவுகரியமான பயணத்தையும், இதுபோன்ற விபத்துக்களிலிருந்து பாதுகாப்பையும் அளிக்க வேண்டியது, ரயில்வே நிர்வாகத்தின் முழு பொறுப்பும் கடைமையாகும். இந்த கோர விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு சமத்துவ மக்கள் கட்சி சார்பில் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment