சென்னை : அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு தொழில்நுட்பத்துடன் அணுமின் நிலையத்தை மத்திய அரசு அமைத்து வருகிறது. அணுமின் நிலையம் அமைப்பதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று வசிப்பிடம், அவர்களுக்கு இழப்பீடு, தொழில் வேலைவாய்ப்பு, பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற எந்த முன் நடவடிக்கையும் எடுக்காமல், அணு உற்பத்தியை தொடங்க நினைப்பது தவறானது. எனவே, கூடங்குளம் அணுமின் உற்பத்தியை நிறுத்தி வைத்து, அப்பகுதி மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்

No comments:
Post a Comment