திருநெல்வேலி, மார்ச் 21:
அ.தி.மு.க. கூட்டணியில் தென்காசி, நான்குனேரி ஆகிய 2 தொகுதிகளைப் பெற்றுள்ளது ச.ம.க. இதில் தென்காசி தொகுதியில் அக் கட்சியின் தலைவரான சரத்குமார் போட்டியிடுகிறார்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் தென்காசி செல்லும் வழியில் திருநெல்வேலியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால்தான் தமிழ்நாட்டில் நல்லாட்சி மலரும்.
அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி அந்த வெற்றியைப் பெறும். அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு, உறுதியோடு கடினமாக உழைத்து வெற்றிக் கனியை பறிப்போம்.
தென்காசி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் எனற எண்ணத்தில்தான் எனது நடிப்புத் தொழிலை ஏற்கெனவே குறைத்துக் கொண்டேன். ஆனால், அது மட்டுமே காரணம் அல்ல. இப்போது திரைப்படத் தொழிலை ஒரு குடும்பம் கையில் எடுத்துக் கொண்டு நடத்தி வருகிறது. நான் எனது நடிப்புத் தொழிலை குறைத்துக் கொள்ள அதுவும் ஒரு காரணம்.
தென்காசி தொகுதியில் நான் வெற்றி பெற்றால் வெளியூருக்கு ஓடிவிட மாட்டேன். வாரத்தில் திங்கள் முதல் வியாழன் முடிய நான்கு நாள்கள் தொகுதியில் இருந்து மக்கள் பணி செய்வேன். தொகுதி மக்களின் தேவை அறிந்து அதை நிறைவேற்றி கொடுப்பேன்.
நான் மார்ச் 24-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறேன். இன்றே எனது பிரசாரம் தொடங்கி விட்டது. 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய ஆசைதான். ஆனால் காலம் குறைவாக உள்ளது. எனவே, முடிந்த அளவு தொகுதிகளில் பிரசாரம் செய்வேன். என்றார் சரத்குமார்.

No comments:
Post a Comment