Tuesday, March 22, 2011

சரத்குமார் மீது போலீசார் இரண்டு இடங்களில் வழக்குபதிவு

திருநெல்வேலி :
 சைகை காட்டிச்சென்ற நடிகர் சரத்குமார் மீது போலீசார் இரண்டு இடங்களில் வழக்குபதிவு செய்தனர்.  நேற்றுமுன்தினம் இரவில் தென்காசியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் நடிகர் சரத்குமார் தென்காசியில் இருந்து குற்றாலம்நோக்கிசென்றார். அப்போது இரவு 10 மணி கடந்துவிட்டது. ஓட்டுகேட்கமாட்டேன், தலைவர்களின் சிலைகளுக்கு மாலையணிவித்துவிட்டு செல்வதாக கூறிச்சென்றார். தென்காசியில் வருவாய் ஆய்வாளர் சவுந்தரராஜன் புகாரின் பேரிலும், குற்றாலத்தில் எஸ்.ஐ.,சமுத்திரம் புகாரின் பேரிலும் இரண்டு இடங்களிலும் வழக்குபதிவு செய்யப்பட்டது. சரத்குமார், நெல்லைமாவட்ட அ.தி.மு.க.,செயலாளர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் மீது 143 (கூட்டமாக வருதல்), 188 (தடையை மீறி வருவதல்) ஆகிய செக்ஷன்களில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி, மார்ச் 22: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மீது தென்காசி போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  
திருநெல்வேலி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலர் பி.செந்தூர்பாண்டியன் உள்ளிட்ட மேலும் 200 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  தென்காசி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அக் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் முதன்முறையாக தென்காசி நகர் பகுதிக்கு தனது ஆதரவாளர்களுடன் திங்கள்கிழமை வந்தார். தென்காசி கீழப்புலியூரில் உள்ள தேவர் சிலை, தென்காசி மலையான்தெருவில் உள்ள தேவர் சிலை, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அப்போது இரவு 10 மணியை தாண்டியிருந்ததாலும், வெடிகள் வெடித்தும், மேள தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டதாலும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சரத்குமார், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலர் பி.செந்தூர்பாண்டியன் மற்றும் 200 பேர் மீது தென்காசி போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 குற்றாலம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட நன்னகரத்தில் அம்பேத்கர் சிலை, குற்றாலத்தில் அண்ணா சிலைக்கு ச.ம.க., அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர். அவர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக குற்றாலம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment