Tuesday, April 5, 2011

தென்காசி காங்கிரஸார் சரத்குமாருடன் சந்திப்பு

தென்காசி, ஏப். 4: 



தென்காசியில் ச.ம.க., வேட்பாளர் ஆர்.சரத்குமாரை சந்தித்து நகர காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்தனர்.தென்காசி தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் ச.ம.க., வேட்பாளர் ஆர்.சரத்குமார் போட்டியிடுகிறார். தென்காசியில் இரண்டு பிரிவாகச் செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சியினரில் ஒரு பிரிவினர் திங்கள்கிழமை சரத்குமாரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் ரமேஷ், நகர பொதுச்செயலர் காஜாமைதீன், மாவட்ட துணைத் தலைவர் ஜோதிடர் முருகன், இளைஞர் காங்கிரஸ் செயலர் மைதீன்பிச்சை, கபீர் உள்ளிட்டோர் சரத்குமாரைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாடு கல்லுடைக்கும் தொழிலாளர் சங்கத்தினரும் திங்கள்கிழமை சரத்குமாரை சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். தென்காசி வட்டார அமைப்பாளர் முருகன், கடையநல்லூர் கிளைத் தலைவர் சண்முகநாதன், செயலர் மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Source: Click Here  Dinamani

No comments:

Post a Comment