Wednesday, August 31, 2011

சரத்குமார் எம்எல்ஏ விடுத்துள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தி

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், உலகெங்கிலும் வன்முறைகள் ஓய்ந்து அன்பும், மகிழ்ச்சியும், சமாதானமும் தழைத்தோங்க வேண்டும் என்கிற பிரார்த்தனையோடு அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

Wednesday, August 17, 2011

அரசின் திட்டங்களால் விவசாய புரட்சி ஏற்படும்

சென்னை : ‘‘தமிழக அரசின் திட்டங்களால் விவசாய புரட்சி ஏற்படும்’’ என்று சரத்குமார் கூறினார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சட்டப்பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: வேளாண்மை துறை மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனால், வேளாண் துறையில் புரட்சி ஏற்படும். விவசாயம் செழிக்கும். பேரவையில் திமுக உறுப்பினர் துரைமுருகன், அநாகரிகமாக நடந்துகொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

அவர், பேரவை தலைவரை பார்த்து பேசாமல் உறுப்பினர்களை பார்த்து பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், அவரது தொகுதி பிரச்னை குறித்தோ அல்லது பொதுமக்கள் பிரச்னை குறித்தோ பேச வேண்டும் என்றுதான் கூறினேன். யாரையும் அநாகரிகமாக பேசவில்லை.

மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் 20 வருடங்களாக சிறையில் உள்ளனர். நளினிக்கு தூக்கு தண்டனையில் இருந்து மன்னிப்பு அளித்து ஆயுள் தண்டனையாக குறைத்ததுபோல இந்த 3 பேருக்கும் தூக்கு தண்டனையை குறைக்கவேண்டும் என்பதுதான் மக்கள் எண்ணம். எனவே, இந்த கோரிக்கை குறித்து சட்டவிதிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Friday, August 12, 2011

சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.ஏ. சரத்குமார் கோரிக்கை

சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.ஏ. சரத்குமார் (தென்காசி):- தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் வகையில் பட்ஜெட் அமைந்திருப்பதை வரவேற்கிறேன். கடந்த 2005-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டம் என்பதாலேயே நெல்லை மாவட்டம், `ராமநதி-ஜம்புநதி உபரிநீர் மேல்மட்ட கால்வாய்' திட்டத்தை முந்தைய ஆட்சி கிடப்பில் போட்டுவிட்டது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் கருணையோடு பரிசீலித்து, நிதி ஒதுக்க வேண்டும். சுமார் ரூ.6.5 கோடியில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தால் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், தென்காசி, ஆலங்குளம் தொகுதியில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களும் பயன்பெறும். தென்காசியை தலைமையிடமாக கொண்டு நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். தென்காசி தொகுதியில் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும். தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டித்தர வேண்டும். குற்றாலத்தில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும். நெல்லை-தென்காசி சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்.

Thursday, August 4, 2011

தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் விதமாகத் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது -தலைவர் சரத்குமார்


 தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சிகள் வரவேற்றுள்ளன

சரத்குமார்: 2012 ஆகஸ்ட் மாதத்திலிருந்து தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது என்ற அறிவிப்பு நமது மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல வழிவகுக்கும். முதல்வர் ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பதாகவும், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும் விதமாகத் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை :சமச்சீர் கல்வியை தமிழ்நாட்டில் கொண்டு வருவதை பெரும்பாலோர் வரவேற்றார்கள். திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டு வர திட்டங்கள் தீட்டப்பட்டபோது இரு வேறு கருத்துக்கள் நிலவின. சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் முன்பு அனைத்து பள்ளிகளின் பாடங்கள் ஒரே மாதிரியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பள்ளியின் கட்டமைப்பு, அடிப்படை தேவைகள், போதுமான ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என கருத்து தெரிவித்தோம்.

சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் மாணவர்களின் எதிர்கால உயர் கல்விக்கு ஏற்ப தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் புதிய குழுவை அமைத்து தேவையான நடவடிக்கையை முதல்வர் எடுத்து வருகிறார். சமச்சீர் கல்வி பிரச்னையை அரசியல் ஆக்கப் பார்க்கிறார்கள். மாணவர்களைக் கூட போராட்டத்தில் ஈடுபட தூண்டி விடுகிறார்கள். கல்வியோடு விளையாடி சமச்சீர் கல்வி பிரச்னையை வெறும் அரசியலாக்க வேண்டாம். உரிய நடவடிக்கைகளை முதல்வர் எடுப்பார். இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.

Monday, August 1, 2011

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ அறிக்கை

சென்னை, ஆக.1:திமுகவின் முக்கிய நிர்வாகிகள் நடத்திய நில மோசடிகளை அறிந்து மக்கள் கொதித்துப்போய் இருக் கிறார்கள்.
.
இதனால் திமுகவிற்கு ஏற் பட்டுள்ள களங்கத்தில் இருந்து தப்பிக்க மக்களை திசை திருப்புவதற் காக திமுகவினர் போராட்டம் நடத்து கிறார்கள் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:சமச்சீர் கல்வியை தமிழ்நாட்டில் கொண்டுவருவதை பெரும்பாலோர் வரவேற்ற போதிலும், கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டுவர திட்டங்கள் தீட்டப்பட்டபோது சமச்சீர் கல்வி வேண்டும், வேண்டாம் என்ற இருவேறு கருத்துக்கள் சமச்சீர் கல்வியை அமல்படுத்தும் முன்பு அனைத்துப்பள்ளிகளின் பாடங்கள் ஒரே மாதிரியாக இருப்பதோடு

மட்டுமல்லாமல், பள்ளியின் கட்டமைப்பு வசதி, அடிப்படை தேவைகள், போதுமான ஆசிரியர்கள் என அனைத்து பள்ளிகளையும் அதாவது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளையும் மேம்படுத்த வேண்டும் என்றும், சமச்சீர் கல்வி பாடங்கள் மாணவர்களின் உயர் கல்விக்கேற்ப தரமானதாக அமைந்திட வேண்டுமென்றும் தெரிவித்திருந் தோம். சமச்சீர்கல்வி பாடத்திட்டங்கள் மாணவர்களின் எதிர்கால உயர் கல் விக்கு ஏற்ப தரமானதாக அமைந்திட வேண்டும் என்பதற்காகத்தான் முதல்வர்  ஒரு புதிய குழு அமைத்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஏதோ கடந்த ஆட்சியாளர்கள் கொண்டுவந்த திட்டங்களை அமல் படுத்தக்கூடாது என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்படுவதாக புரிந்துகொண்டு சமச்சீர்கல்வி அமல் படுத்துவதில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

சமச்சீர் கல்வி பிரச்சினையை அரசியலாக்கப் பார்க்கிறார்கள். தூண்டி விடுகிறார்கள். உச்சநீதிமன் றத்தில் இது குறித்த வழக்கில் உரிய தீர்ப்பு கிடைக்கும் வரைகூட அவர் களால் காத்திருக்க முடியவில்லை.நில அபகரிப்பு மோசடிகளில் தவறு செய்தவர்களை தண்டனை பெற்றே தீர வேண்டும்,  திமுகவின் முக்கிய நிர்வாகிகள் இவர் நடத்திய நில மோசடிகளை அறிந்து மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.

இந்த குற்றச்சாட்டுகளில் இருந்தும் திமுகவிற்கு ஏற்பட்டுள்ள நிரந்தர களங்கத்தில் இருந்தும் தப்பிப்பதற் காக மக்களைத் திசைதிருப்ப சமச்சீர் கல்வி பொய்வழக்கு என்று போராட் டம் நடத்துகிறார்கள்.ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்டபோதும், தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கொலை செய்யப்பட்டபோதும்கூட வேடிக்கை பார்த்தவர்கள் இன்று போராட்டம் நடத்துகிறார்கள். குழந் தைகளின் கல்வியோடு விளையாடி சமச்சீர் கல்வி பிரச்சினையை வெறும் அரசியலாக்க வேண்டாம். உரிய நட வடிக்கைகளை உரிய நேரத்தில் தமிழக முதல்வர் எடுப்பார் என்பது உறுதி.இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.