Friday, August 12, 2011

சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.ஏ. சரத்குமார் கோரிக்கை

சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.ஏ. சரத்குமார் (தென்காசி):- தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் வகையில் பட்ஜெட் அமைந்திருப்பதை வரவேற்கிறேன். கடந்த 2005-ம் ஆண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டம் என்பதாலேயே நெல்லை மாவட்டம், `ராமநதி-ஜம்புநதி உபரிநீர் மேல்மட்ட கால்வாய்' திட்டத்தை முந்தைய ஆட்சி கிடப்பில் போட்டுவிட்டது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் கருணையோடு பரிசீலித்து, நிதி ஒதுக்க வேண்டும். சுமார் ரூ.6.5 கோடியில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தால் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், தென்காசி, ஆலங்குளம் தொகுதியில் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களும் பயன்பெறும். தென்காசியை தலைமையிடமாக கொண்டு நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். தென்காசி தொகுதியில் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும். தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டித்தர வேண்டும். குற்றாலத்தில் சித்த மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும். நெல்லை-தென்காசி சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்.

No comments:

Post a Comment