தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 10, 11 ஆகிய திகதிகளில் பிரசாரம் செய்ய உள்ளேன்.
அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்வேன். அதற்கான பயண திட்டம் பின்னர் வெளியிடுவேன்.
தேர்தல் பிரசாரம் செல்வதற்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினேன். கூடங்குளம் அணு மின் நிலையம் பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்திக்க சென்ற தமிழக அரசு குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன்.
பிரதமருடன் சந்தித்த போது என்ன நடந்தது என்பது குறித்தும் முதல்வரிடம் விளக்கி கூறினேன் என்றார்.
இந்தியக் கடல் எல்லையை வரையறை செய்ய வேண்டும்:சரத்குமார்
ஈரோடு, அக். 9:
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க, இந்திய கடல் எல்லையை மத்திய அரசு உடனடியாக வரையறை செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் எம்எல்ஏவுமான சரத்குமார் தெரிவித்தார்.ஈரோட்டில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் தெரிவித்தது: உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வரும் 11-ம் தேதி முதல் பிரசாரம் செய்கிறேன்.
ஈரோட்டில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வரும் 13-ம் தேதி பிரசாரம் செய்ய உள்ளேன். இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க, இந்திய கடல் எல்லையை மத்திய அரசு உடனடியாக வரையறை செய்ய வேண்டும். கடல் எல்லையில் இந்திய ராணுவத்தை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
காமன்வெல்த், ஸ்பெக்ட்ரம் என பல்வேறு ஊழல் புகாரில் சிக்கியுள்ள மத்திய காங்கிரஸ் அரசு, ஆட்சிப் பொறுப்பிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தைப் பொறுத்தவரை, பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தொடர் நடவடிக்கைகளை பிரதமர் உடனடியாக அறிவிக்க வேண்டும்.
நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டுóம் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன்பிறகு, நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கும் என்றார்.
கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக தமிழக குழுவினர், தமிழக நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்த்தித்து பேசினர்.

அப்போது பிரதமர் போரட்டத்தை முக்கியத்துவத்துவத்தை உணர்ந்து உள்ளதாகவும், தற்போது பரமரிப்பு பணி மட்டுமே நடந்து வருவதாகவும் கூறினார். கூடங்குளம் பிரச்சினை தொடர்பாக உயர்மட்டகுழு ஆய்வுக்குழு அமைக்கப்படும் ஆய்வுக்குழு அறிக்கைக்கு பின்னரே பணி தொடரப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இக்குழுவில் அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் தம்பிதுரை எம்பி, துணைத் தலைவர் மைத்ரேயன் எம்பி., தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு, பாஜக தமிழ் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சரவணபெருமாள், இ.கம்யூ., கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த சந்திப்பில் இடம்பெற்றிருந்தனர்.

No comments:
Post a Comment