குற்றால சாரல் திருவிழாவில் சமத்துவ கட்சி தலைவர் உறுதி
தென்காசியில் ரிங்
ரோடு விரைவில் அமைக்கப்படும் என்று குற்றால சாரல் திருவிழாவில் சமத்துவ
கட்சி தலைவர் உறுதி கூறி உள்ளார் ..
குற்றாலத்திற்கு வரும்
சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்த சாரல் திருவிழா நேற்று
துவங்கியது.குற்றாலத்தில் சாரல் திருவிழா நேற்று துவங்கியது. குற்றாலம்
கலைவாணர் அரங்கில் நடந்த துவக்கவிழா நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர்
செல்வராஜ் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் ராஜகிருபாகரன்
வரவேற்புரையாற்றினார். தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர்
செந்தூர்பாண்டியன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
விழாவில் சரத்குமார் பேசுகையில், குடும்பத்துடன் பொழுது போக்குவதற்கும்,
சுற்றுலா செல்வதற்கும் குற்றாலம் ஏற்ற வகையில் உள்ளது. தென்காசியில் ரிங்
ரோடு விரைவில் அமைக்கப்படும். அருவிக்கரை பகுதியை நாம் சுத்தமாக
வைத்திருக்க வேண்டும். குற்றாலத்தில் சுற்றுலா தரத்தை உயர்த்தும் வகையில்
ஐந்தருவியில் 6 கோடி ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்படுகிறது என்றார்.
நேற்று மாலை துவங்கிய திருவிழா நாளையுடன் முடிகிறது என்பது
குறி்ப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment