Wednesday, April 13, 2011

205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்-சரத்குமார்

நெல்லை: சட்டசபைத் தேர்தலில் 205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.


தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் சரத்குமார் போட்டியிடுகிறார். இன்று நெல்லையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு பிரகாசமாக உள்ளது. 205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.

ஓட்டுப் போடாத சரத்

சரத்குமாருக்கு சென்னையில்தான் ஓட்டு உள்ளது. ஆனால் தென்காசியில் போட்டியிடுவதால் அவர் தென்காசியில் இன்று முகாமிட்டு வாக்குச் சாவடிகளில் ஓட்டுப் பதிவைக் கண்காணித்து வந்ததால் சென்னை சென்று ஓட்டுப் போடவில்லை.

No comments:

Post a Comment