Wednesday, June 1, 2011

குற்றாலத்தில் தீம் பார்க் உருவாக்கப்படும்

முதல்வர் ஜெயலலிதாவின் எளிமையைப் பலரும் பாராட்டுகின்றனர்" என்று சமீபத்திய தமிழகச் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவான நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தென்காசியில் அளித்த பேட்டி பின்வருமாறு:
"தமிழக மக்கள் மாற்றம் விரும்பி வாக்களித்துள்ளனர். நல்ல ஆட்சி அமைந்துள்ளது என்று நிம்மதியடைந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா தனது சுற்றுப்பயணம் மற்றும்  போக்குவரத்தின்போது பொதுமக்களுக்கு எந்த இடையூறும் விளைவிக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளார். இலவச அரிசி திட்டத்தைக் கூட எளிமையாக நடத்துகிறார்.
முதல்வர் ஜெயலலிதாவின் எளிமைக்குப் பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர். தென்காசி தொகுதியில் குடிநீர், சாலை, மின்விளக்கு பிரச்னைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்னைகள் மற்றும் அரசு மருத்துவமனை மேம்பாடு போன்றவற்றில் போர்க்கால நடவடிக்கை எடுக்க அமைச்சர்களை வலியுறுத்துவேன்.
உழைப்பவரே உயர்ந்தவர் என்ற கொள்கை உடையவன் நான். உழைப்பின் மீது அதிக நம்பிக்கை உள்ளவன். அது வீண்போகாது. தமிழ்நாட்டில் நடிகராக பல்வேறு கட்டங்களைத் தாண்டிவந்த நான் சிறந்த எம்எல்ஏவாக செயல்படுவேன். குற்றாலத்தில் தீம் பார்க் உருவாக்கப்படும்.  தென்காசி தொகுதிக்கு என்னென்ன தேவைகள் என்பது குறித்து மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும்.  மின்வெட்டு, மணல் பிரச்னை, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றில் முதல்வர் நல்ல முடிவெடுப்பார்."

இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சமக நிர்வாகிகள் காளிதாசன், ஜெயப்பிரகாஷ், விவேகானந்தன், சண்முகசுந்தரம், மாடசாமி, முத்துக்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment