நாகர்கோவில், ஜூன் 5:
ஆரல்வாய்மொழி பொய்கை அணையில் மணல் எடுக்கப்படுவதால் அணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலர் ஜி. தியோடர் சேம் அனுப்பியுள்ள மனு:
ஆரல்வாய்மொழியிலுள்ள பொய்கை அணைப்பகுதியிலிருந்து சுனாமி குடியிருப்புகள் கட்டுவதற்கு மணல் எடுக்கப்பட்டு வருகிறது. பல லட்சம் மதிப்புள்ள இந்த மணல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையுடன் நூற்றுக்கணக்கான லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன. கன்னியாகுமரி முதல் தூத்தூர் வரையிலான சுனாமி குடியிருப்புகளுக்காக ரூ. 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக் குடியிருப்புகளைக் கட்டும் பணி 12 அரசு ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகள் கட்டுவதற்கான மணல் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து எடுத்துவர ஒப்பந்தப்புள்ளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பணிகளை முடிக்க இன்னும் 15 மாதகாலம் அவகாசமும் உள்ளது. இந்நிலையில், அரசு அதிகாரிகள் அனுமதியுடன் பொய்கை அணைப்பகுதியில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தோவாளை கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளும் மணல் தட்டுப்பாட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக அணைக்குள்ளிலிருந்து மணல் அள்ள அனுமதி அளித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதைத் தடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment