குற்றாலத்தில் தீம் பார்க் : சரத்குமார் வலியுறுத்தல்
விழாவில் சமக தலைவரும் நடிகருமான சரத்குமார் பேசும்போது,
குற்றாலத்தில் சாரல் திருவிழா நேற்று துவங்கியது. இவ்விழாவின் துவக்க விழாவுக்கு அமைச்சர் செந்தூர்பாண்டியன் தலைமை வகித்தார். தென்காசி எம்எல்ஏ சரத்குமார், சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் ஜெயக்கொடி, ஆணையர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர். கலெக்டர் நடராஜன் வரவேற்றார்.
அமைச்சர் கோகுலஇந்திரா குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.
‘’குற்றாலத்தில் சீசன் உள்ள சில மாதங்கள் மட்டுமே சுற்றுலா பயணிகள் வரும் நிலை உள்ளது.
ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வரும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டு மேம்படுத்த வேண்டும். வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகையில் தீம்பார்க் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

உலகப் புகழ்பெற்ற நயாகரா மற்றும் விக்டோரியா நீர்வீழ்ச்சிகளை பார்த்து ரசிக்க மட்டும்தான் முடியும். ஆனால், குளித்து மகிழத்தக்க வகையில் உள்ள அருவி குற்றாலம் மட்டும்தான். அனைத்து அணைகளையும் இணைத்து சர்க்யூட் சுற்றுலா செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.

No comments:
Post a Comment