சென்னை, அக்.26 -
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தீபாவளியையொட்டி விடுத்துள்ள வாழ்த்து செய்தி வருமாறு:- புராண, இதிகாச நிகழ்வுகளின் அடிப்படையில் பண்டிகைகள் கொண்டாடப்படுவது காலம் காலமாய் வழக்கமான ஒன்றாக இருந்தாலும், பண்டிகைகளின் அடிப்படை நோக்கம் குடும்பங்களின் குதூகலமும், சமுதாயத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும் நீடித்து நிலைக்க வேண்டும் என்பதுதான். ஒரு கட்டுப்பாடன சமுதாயத்தில் தான் பண்டிகைகள் ஏற்படுத்தும் உற்சாகத்தையும் ஒருமைப்பாட்டையும் முழு உணர்வோடும் நம்பிக்கையோடும் அனுபவிக்க முடியும்.
அந்த வகையில் தீபாவளித் திருநாளும் மகிழ்ச்சியோடு கொண்டாடப்படும் இந்திய கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்த நன்னாளாகும். இந்த தீப ஒளித்திருநாளில் வாழ்வில் சூழ்ந்த இருள் விலகி அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி ஆனந்தமாய் வாழ வேண்டும் என்கிற எனது நல்லெண்ணத்தை பகிர்ந்துகொள்கிறேன்.
தமிழகம் மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும், என் சார்பிலும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:
Post a Comment