Sunday, October 23, 2011

முழு அரசு மரியாதையுடன் அமைச்சர் கருப்பசாமி உடல் அடக்கம்-சரத்குமார் அஞ்சலி

சங்கரன்கோவில்.அக்.24.
உடல் நலக்குறைவால் மரணமடைந்த தமிழக அமைச்சர் கருப்பசாமியின் உடல் அடக்கம் நேற்று அவரது சொந்த ஊரான புளியம்பட்டியில் நடைபெற்றது. சென்னையில் தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக அமைச்சர் கருப்பசாமி நேற்று முன்தினம் மதியம் காலமானார். இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் கருப்பசாமி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் தராமல் மரணமடைந்த அவரின் உடலுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் மருத்துவமனையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல்; கூறியவர் உங்களுக்கு எது வேண்டுமானலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள். உங்கள் குடும்பத்திற்கான எல்லா உதவிகளையும் நான் செய்வேன் என் கடமை அது என்று கண் கலங்கியபடி கூறினார். முதலமைச்சர் உடன் சபாநாயகர் ஜெயக்குமார்,சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் , அமைச்சர்கள் செங்கோட்டையன், செந்தமிழன், கோகுல இந்திரா, செல்லுார் ராஜு, சின்னய்யா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment