தென்காசி. நவ. - 26 -தென்காசி சட்டமன்ற தொகுதியில் 30.11.2011 அன்று சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சரத்குமார் தமிழக அரசு வழங்கும் இலவச மிக்சி, கிரைண்டர், பேன்ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். தென்காசி தொகுதிக்கு உட்பட்ட ஆயிரப்பேரி ஊராட்சியில் அங்கராயன்குளம், சில்லரைப்புரவு ஊராட்சியில் முத்துமாலைபுரம், வீ.கே.புதூர் தாலுகா முத்தம்மாள்புரம், கே.நவநீதகிருஷ்ணாபுரம், ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவற்றை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி கோட்டாட்சி தலைவர், தென்காசி, வீ.கே.புதூர் வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சமத்து மக்கள் கட்சி நிர்வாகிகள் எஸ்.வி.கணேசன், அமைப்பு செயலாளர் காளிதாசன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.

Its Best Political Leader - Supreme Star sarathkumar
ReplyDelete