கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம்
முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்று மத்திய அரசை
வலியுறுத்தும் வகையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய
ஆர்ப்பாட்டம் வரும் 30 ம் தேதி நடத்தப்படும் என்று அக்கட்சி தலைவர்
சரத்குமார் தெரிவித்துள்ளார்.குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் மின்பற்றாக்குறை காரணமாக கல்வி, தொழில், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மக்கள் பாதிக்கப்ப ட்டுள்ளனர். தற்போது கூடங்குளம் அணு மின்நிலையத்தில் முதல் இரண்டு அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த மின்சாரம் அனைத்தையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும். மத்திய அரசிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வரும் 30 ம் தேதி தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்பாட்டம் நடத்தப்படும் என கூறினார்.
இதேவேளை, 'தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை கூடங்குளம் அணுஉலையால் தீர்த்துவிட முடியாது. கூடங்குளம் அணுஉலை தொடங்கப்பட்டால் தமிழ்நாட்டின் மின்தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற தமிழக அரசின் பிரசாரம் ஒரு அப்பட்டமான பொய்' என அணு உலை ஆராய்ச்சியாளரும் பொறியியயாளருமான நீரஜ் ஜெயின் நேற்று கோவையில் நிருபர்களுக்கு கருத்து கூறியிருந்தார்.
கூடங்குளம் அணுஉலைகளில் தற்போது நிறுவப்பட்டுள்ள உலைகளின் உற்பத்தி திறன் 2000 மெகாவாட்.கூடங்குளம் 2 அணுஉலைகளிலும் 1000 மெகாவாட் மின்உற்பத்தியாகிறது என்றால், அணுஉலையானது தன் சொந்த தேவைக்கு 10 சதவீதம் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 900 மெகாவாட் மின்சார உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு 30 லிருந்து 40 சதவீதம் மின்சாரம் அளிக்கிறார்கள்.
இதில் 20 சதவீதம் மின்கடத்தல் மூலம் நஷ்டம் அடையும். அந்த 20 சதவீத்தையும் கழித்தால் மீதி 20 சதவீதம் தான் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும்.அப்படியென்றால் மொத்தம் 290 மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கும்.
தமிழகத்திற்கு தற்போது 3500 மெகாவாட் மின்பற்றாக்குறை உள்ளது. இதில் 290 மெகாவாட் மின்சாரம் எவ்வளவுக்கு பயன்படுத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment