மேடையில் பேசும்போதே தான் என்ன பேசுகிறோம் என்பது கூடத் தெரியாதவர்
விஜயகாந்த். அவரை நான் விட மாட்டேன், அவரது கட்சி ஜெயித்த ஒவ்வொரு
தொகுதிக்கும் போய் அவருக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்று கூறியுள்ளார்
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
சேலத்தில் காமராஜர் பிறந்த நாள், சரத்குமார் பிறந்த நாள், கட்சி நிதியளிப்பு நாள் என முப்பெரும் விழாவைக் கொண்டாடியது சரத்குமார் கட்சி.
நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில், நம்மை நல்ல இடத்தில் வைத்திருக்கிறார் முதல்வர் அம்மா. நாம நல்லவரோடு இருக்கோம், வல்லவரோடு இருக்கோம். நான் இப்பவே அமைச்சராக தான் இருக்கிறேன். அம்மா அப்படிதான் என்னை நல்ல இடத்தில் வைத்திருக்கிறார் அவருக்கு ஒரே ஒரு கோரிக்கை இன்று கல்வி வணிகமாகிவிட்டது எனவே கல்வியை இலவசமாக தர முயற்சிக்கவும்.
ஒரு மைலுக்கு ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் என விரும்பியவர் காமராஜர். கல்வி ஒளியேற்றியவர் அவர். அவரின் வழியில் கல்வி ஒளி ஏற்ற கூடியவர்கள் நாம். உங்களில் ஒருவர் முதல்வர் ஆகணும் என்பதற்காக தான் இந்த முப்பெரும் விழாவே.
சிறை நிரப்பும் போராட்டம் செய்தவர்கள் முல்லை பெரியார் போன்ற மக்கள் பிரச்சனைக்காக ஏன் செய்யவில்லை? இப்போ சொல்றாரு ஈழத்தை மீட்டு தருவேன்னு அத ஏன் இங்க இருந்து சொல்றிங்க அங்க போயி (இலங்கை) கேட்க வேண்டியது தானே!.
41 பெற்று அதில் 29ஐ வென்றவர் ஒருவர். என்னால் தான் ஆட்சி அமைந்ததுனு சொல்லிக்கிட்டு இருந்தாரு, இப்போ ஆளையே காணோம். மேடையில பேசும் போதே என்ன பேசினோம்னு மறந்துடுராரு. அவர் சட்டமன்றத்திற்கு வருவதில்லை, கேட்டால் வழக்கு என்கிறார். வழக்கு ஐந்து வருடம் நீடித்தால் ஐந்து வருடமும் வரமாட்டாரா? அப்படி என்றால் அவர் கட்சிக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த மக்களின் கதி?
அவரை விடமாட்டேன், அவரின் 29 தொகுதிகளுக்கும் இனி ஒவ்வொன்றாக போக போகிறேன் மக்கள் பணி ஆற்றுவேன்.
நான் என் தாய்க்கு பிறந்தேன். கருவில் இருக்கும் வரை நான் கருவே. நாடார் அல்ல. எனவே நமது காமராஜரையும் நாடார் என சுருக்க வேண்டாம் அவர் பாரத தலைவர் இந்த கொள்கையோடு மக்கள் பணி செய்வோம் நமக்கு பதவி முக்கியமில்லை சேவையே முக்கியம் என்று பேசினார் சரத்குமார்.

No comments:
Post a Comment