Tuesday, July 1, 2014

தி.மு.க.வை மக்கள் ஒதுக்கி விட்டனர்: சரத்குமார் பேட்டி

தூத்துக்குடி, ஜூன்.30-

தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கொடியேற்று விழா நேற்று காலையில் நடந்தது. கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, எம்.சேவியர் நாடார் நினைவு கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றினார்.

இதை தொடர்ந்து சரத்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். மீனவர்கள் பிரச்சினைகளை தீர்க்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். மத்திய அரசும் செவி சாய்த்து வருகிறது.

தி.மு.க. தலைவர், தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று கூறியுள்ளார். தி.மு.க.வை யாரும் அழிக்க முயற்சிக்கவில்லை. மக்களே அவர்களை ஒதுக்கி வைத்து விட்டனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான ஆட்சியால், பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்தது தொடர்பாக முதல்- அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment