தென்காசி, ஜூன் 1:
தமிழக முதல்வரின் செயல்பாடுகள் அவர் சிறந்த ஆட்சியைத் தருவார் என்ற நம்பிக்கையை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. கூறினார்.
தென்காசியில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை புதன்கிழமை திறந்துவைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நல்லாட்சியமைத்து, அதில் நாங்களும் செயல்பட வாய்ப்பளித்த தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊழல் ஆட்சியை அகற்றியதன் மூலம், தமிழக மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். தமிழக முதல்வரின் செயல்பாடுகள் மிகச் சிறந்த ஆட்சியைத் தருவார் என்ற நம்பிக்கையை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆட்சி நடைபெறுவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
தென்காசி பகுதியில் குடிநீர் பிரச்னை, சாலை வசதிகள், மருத்துவமனையில் வசதியின்மை போன்றவற்றை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மூலம் தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். தொகுதியில் சிறு குறைகள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்வேன்.
குற்றாலத்தை மையமாகக் கொண்டு அதைச் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர். பேட்டியின் போது, சமக கொள்கைப் பரப்புச் செயலர் ஆர்.ஜெயப்பிரகாஷ், மாநில அமைப்புச் செயலர் ஆர்.காளிதாசன், தென்மண்டல அமைப்புச் செயலர் என். சுந்தர், கலை இலக்கிய அணிச் செயலர் என்.எம்.எஸ்.விவேகானந்தன், மேற்கு மாவட்டச் செயலர் தங்கராஜ் உள்பட பலர் இருந்தனர்.

No comments:
Post a Comment