Sunday, May 29, 2011

சமக.,வினர் கொண்டாட்டம்


ஆலங்குளம் : சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றியை ஆலங்குளம் நகர சமக வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதிமுக கூட்டணியில் சமக தென்காசி, நான்குநேரி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தென்காசி தொகுதியில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியையும், அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியையும் ஆலங்குளம் நகர சமகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு நகர சமக தலைவர் சோனா மகேஷ் தலைமை வகித்தார். சமக ஒன்றிய செயலாளர் ராபர்ட், அதிமுக நகர செயலாளர் சுப்பிரமணியன், தேமுதிக நகர செயலாளர் பழனிசங்கர், ஒன்றிய ஜெ., பேரவை செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சமக இளைஞரணி குமரேசன், முத்துசாமி, ராஜா, தேமுதிக நிர்வாகிகள் திருமலை செல்வம், அல்போன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம்:  தேர்தல் முடிவு அன்று சாத்தான்குளம் ச.ம.க வினர்  ஒன்றிய தலைவர்  ஜான் ராஜா  மற்றும் ஒன்றிய பிரிதிநிதி லிங்கேசன் தலைமைஇல்  காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செய்து  காமராஜர் பேருந்து நிலையத்தில் உள்ள பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த கொண்டாடத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் , தொண்டர்களும் , ச.ம.க தொண்டர்களும் பரவலாக கலந்து கொண்டனர்..



இது போலவே தமிழ்நாடு முழுவதும் ச.ம.க வினர்   கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து வெற்றியை கொண்டடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment