சென்னை, செப்.- 16 - அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் சங்கங்கள் இயங்க வேண்டும் என்று சரத்குமார் கூறினார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு நாளன்று சட்டப்பேரவையில் பேசியதாவது:- ஆள்வதற்காக அரசுக்கட்டிலில் அமர்ந்தவன் ஒரு தாயைப் போல இருக்க வேண்டும் . ஒரு கர்ப்பிணிக்குரிய தர்மமே அரச தர்மம் தனக்கு விருப்பமான உணவை விட கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான உணவையே ஒரு தாய் ஏற்பாள் ஆட்சியாளனும் தனக்கு விருப்பமான செயல்களை செய்யாமல்,மக்கள் நலனுக்குரிய காரியங்களில் மட்டுமே ஈடுபட வேண்டும் என்று மகாபாரதத்தில் பீஷ்மர் தர்மருக்கு அரசியல் பற்றி உரைத்தார் என்று ஒரு செய்தி உண்டு.இப்படி மகாபாரதத்தில் ஆட்சியில் இருப்பவர் ஒரு தாயைப்போல் இருக்க வேண்டும் என்ற அரசியல் தர்மத்தை நிரூபித்து நிலைநாட்டும் விதமாக இன்று தமிழகத்தில் தாயுள்ளம் கொண்ட முதல் அமைச்சரின் செயல்பாடுகள் இருக்கிறது என்பதை பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.
ஒரு நேர சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம். ஒரு அறுவடை மோசமானால் ஒரு வருடம் நஷ்டம். ஆனால் ஒரு ஆட்சி மோசமானால் ஐந்து வருடம் நஷ்டம். கடந்த ஐந்தாண்டுகாலமாக நஷ்டக்கணக்கை மட்டுமே பார்த்து வந்த தமிழக மக்கள் ஒரு மாற்றம் விரும்பி தமிழகத்தில் நல்லாட்சி மலர்வதற்கு வித்திட்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது. தன்னலம் கருதாமல் நாட்டு மக்கள் நலனில் அக்கறை அறிவார்ந்த நிர்வாகத் திறமை மாசற்ற தொண்டுள்ளம் கொண்டவர்களே அரசியலில் அடியெடுத்து வைத்து நாட்டுக்கும் மக்களுக்கும் நல்வழி காட்ட முடியும் என்பதை முதலமைச்சர் நிரூபித்து வருகிறார்கள். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பது பழமொழி. ஆனால் ஐந்தாண்டு கால சாதனைகளுக்கு கடந்த 123 நாட்களின் சாதனைகளே சான்று என்பதை தமிழக அரசியல் வரலாறு, தனது பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பொறித்துக் கொண்டுள்ளது என்பதை இம்மன்றத்தில் நான் பெருமையோடு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த பொழுது. கவிஞர் எஸ்,டி, சுந்தரம், காமராஜரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார், நீnullங்கள் கட்டிய அணைகள், பள்ளிகள், தொழிற்கூடங்கள் ஏராளம், ஆனால் உங்கள் சாதனைகளை எல்லாம் மக்களுக்கு. அடிக்கடி நினைவூட்டும் விதமாக அதை ஒரு குறும் படமாக எடுத்து. நம் ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு நினைவுக்கு கொண்டு வந்தால் நல்லது என்றார் கவிஞர், அப்படியா? அதற்கு எவ்வளவு செலவாகும் என்று பெருந்தலைவர் கேட்டார், ரூ, 3 லட்சம் இருந்தால் போதும் என்று கவிஞர் சொன்னதும் லட்சம் ரூபாயா? அந்தப் பணத்தில் நான் இன்னும் 10 பள்ளிக்கூடங்களை கட்டுவேனே. முதலில் இடத்தை காலி செய்யுங்கள் என்று பெருந்தலைவர் கோபப்பட்டாராம்,
ஆனால் தமிழகத்தில் வேலைவாய்ப்பு இன்றி சுமார் 70 லட்சம் இளைஞர்கள் வீதியில் நின்ற போதும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு சாலை வசதிகள் இல்லாத போதும் தரமான பள்ளிகளும், சுகாதார நிலையங்களும், அடிப்படை
கட்டமைப்பு வசதிகளும் இல்லாத சூழ்நிலையில் , ஏற்கெனவே தலைமைச் செயலகம் இருக்கிற பொழுது, சுமார் 720 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகமும் சட்டசபையும் அவசியம்தானா? என்று அனைவரும் வேதனைப்பட்டுக் கொண்டு இருந்தபோது.
அப்படி கட்டப்பட்ட கட்டிடம், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில். பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனை நசீஙீடீஙு நஙீடீஷடுஹங்சிநீ ஏச்ஙூஙீடுசிஹங், புதுடெல்யில் உள்ள அஐஙந மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் அமையும் என்று அறிவித்த. முதல்வரின் இந்த நற்செயல். மக்கள் வரிப்பணம் ஆடம்பரமான செலவுகளில் வீணடிக்கப்படாமல். பயனுள்ள வகையிலே உபயோகப்பட வேண்டும் என்கின்ற பெருந்தலைவரின் ஒப்பற்ற சிந்தனையோடு ஒத்துப்போயிருப்பதை எண்ணி. வியந்து பாராட்டுகிறேன்.
மேலும் பி பிளாக் கட்டிடங்களில் புதியதாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க இருப்பதும் பாராட்டத்தக்கது, கடந்த கால ஆட்சியில் வீண் ஆடம்பரத்திற்கும். சுயவிளம்பரத்திற்கும் மற்றுமோர் எடுத்துக்காட்டைக் கூறுவதென்றால் அது. கோவையில் நடந்த உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழ் மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டதில் உலகத் தமிழர் அனைவருக்கும் பெருமை உண்டு. கெளரவம் உண்டு, அந்த கெளரவம் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை, ஆடம்பரமாக விழாக்கள் நடத்துவதால் மட்டுமே தமிழ் மொழி வளர்ந்து விடாது, செம்மொழி மாநாட்டின் மூலம் தமிழுக்கு கிடைத்த பெருமையை விட கடந்த ஆளும் கட்சியினர் செய்த விளம்பரம் மட்டும் தான் அதிகம், ஆகவேதான். நான் அப்போதே கருத்துக் கூறி இருந்தேன், அந்த மாநாட்டிற்காக செலவு செய்த தொகையில். nullநீண்ட காலமாக நிறைவேறாமல் இருக்கும்.
கொங்கு மண்டல மக்களின் கனவுத்திட்டமாகிய அத்திக்கடவு. அவினாசி கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் தேவையும். லட்சக்கணக்கான மக்களின் குடிநீnullர் தேவையும் nullர்த்தியாகி இருக்கும், இப்படியாக மக்களின் வரிப்பணத்தை வீணடித்த முந்தைய அரசின் தவறுகளை சுட்டிக்காட்டவே பெருந்தலைவர் ஆட்சியில் நடந்த சம்பவத்தைக் கூறினேன்.
முந்தைய ஆட்சியாளர்களின் தமிழ்ப் பற்றை இந்த நேரத்தில் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன், தினந்தோறும் சட்டப் பேரவைக்கு வந்து பேரவைத் தலைவர் கூறும் திருக்குறளை. செவி மடுத்து கேட்டுவிட்டு வெளிநடப்பு செய்யும் தி,மு,க எம்,எல்,ஏ க்களின் தமிழ் உணர்வை பாராட்டுகிறேன், தீர்மானங்களின் மீது விவாதத்தில் பங்கேற்காமல். திருக்குறளை கேட்பதற்காவது பேரவைக்கு வரும் அவர்களது தமிழ் உணர்வை மதிக்கிறேன்.
அதே போன்று, கடந்த ஆட்சியினர் தமிழ்மண் மீது கொண்டிருந்த பற்றினையும். சமீபத்தில் நில அபகரிப்பு வழக்குகள் மூலமும் தெரிந்து கொள்ள முடிகிறது, அப்படியிருக்க தமிழ்நாட்டிருக்கிற மண்ணையெல்லாம் தாங்கள் அள்ளிக் கொண்டு போகவேண்டுமென்ள நிலைமையை உருவாக்கி. அதைத் தட்டிக் கேட்கின்ற அளவுக்கு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், இல்லையேல் தண்டையை வாங்கித் தர வேண்டும் என்று முதல்வர் நில அபகரிப்பு செய்ததை தடுத்தி நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை இங்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாடல் தான், ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்; உடல் உழைக்கச் சொல்வேன் உயிர் பிழைக்கச் செய்வேன் அவர் உரிமைப் பொருட்களைத் தொடமாட்டேன், என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது.
ஆகவே கடந்த 123 நாட்களில் முக்கியமாக இந்தச் சட்டமன்றத்தில் சீரிய பல தீர்மானங்கள். கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன, அனைத்தும் பாராட்டுக்குரியதாகும், இந்த சட்டமன்றத்திலே பல சீரிய திட்டங்களை குறைகூற முடியாத அளவிற்கு சிறந்த திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்துகின்ற திட்டமாக உருவாக்கித் தந்தமைக்கு முதலமைச்சரை நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆனால் இந்தச் சட்டமன்றத்தில் நான் சார்ந்த கலைத்துறை பற்றி எதுவுமே நீnullங்கள் அறிவிக்கவில்லையே என்று என்னைப் பலரும் கேட்டவண்ணமிருந்ததால் அதைமட்டும் சொல்லி நான் அமர ஆசைப்படுகின்றேன், சென்ற ஐந்தாண்டு காலமாக கலைத்துறை நசுக்கப்பட்ட ஒரு தொழிலாக இருந்துவிட்டது, அதற்குள் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் இருந்ததன் அடிப்படையால் அந்தத் தொழில் சிறப்பாக நடக்கமுடியாக ஒரு சூழ்நிலை, பலருக்கும் தனிப்பட்ட முறையில் பாதிப்புகள் ஏற்பட்டு தொழில் முடக்கம் செய்யப்பட்டவர்கள் இந்தத் துறையிலே பலரும் உண்டு, ஆனால் அங்கு இருக்கிற சங்கங்கள் இன்று ஒருவரின் ஆதிக்கத்திலே இருந்த காரணத்தினால் அந்தச் சங்கங்களும் சிறப்பாகச் செயல்படாதச் சூழ்நிலை கடந்த ஆட்சியிலே இருந்துவந்தது, தற்போதும் அந்தச் சூழ்நிலை வந்துவிடக்கூடாது என்ற எண்ணம் அனைவருக்கும் இருப்பதை இந்த மாமன்றத்தில் உங்கள் வாயிலாக முதலமைச்சருக்கு தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கின்றேன், ஆக அங்கு அரசியல் குறுக்கீடு இல்லாத அளவிற்கு சங்கங்கள் இயங்க வேண்டும், இயங்கிக் கொண்டிருக்க வேண்டும், இருந்தது இருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியிலே அது முழுவதுமாக சீரழிக்கப்பட்ட ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
அது மட்டுமல்லாமல். இந்த கலைமாமணி விருது. சென்ற ஆட்சியிலே அந்த ஆட்சியாளர்கள் எந்தெந்த நடிகரையும். நடிகைகளையும் பார்க்க வேண்டுமென்றால் உடனே ஒரு கலைமாமணி விருதை கொடுத்துவிடுவார்கள். ஆகவே இந்தக் கலைமாமணி விருதுக்கே ஒரு மரியாதை இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது, நான்கூட வந்து மூன்று வருடத்திலே ஒரு கலைமாமணி விருது கொடுத்துவிட்டார்கள், ஓய்வுபெற்று போய்விடுங்கள் என்று சொல்கிறது மாதிரி இருக்கிறது, ஆக கலைமாமணி விருதுக்கு என்று தனிப் பெருமை உண்டு. அதில் முதிர்ச்சிபெற்ற கலைஞர்கள் சிறப்பாக நாடகத்தில் நடித்து சினிமாவில் நடித்து பெயர்பெற்று மக்களிடமும் மரியாதைபெற்று வளர்ந்தவர்கள்தான் கலைமாமணி விருதுக்கு உரியவர்கள் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே கலைமாமணி விருதைக் கொடுக்கும்போது சரி சிறந்த நடிகர்களுக்கான விருதைக் ொடுக்கும்போதும் சரி அவர்களைப் பார்ப்பதற்காக நாம் கொடுக்க வேண்டாம், அவர்கள் திறமைகளைப் பார்த்து நாம் விருதுகளைக் கொடுக்கலாம் என்பதை மட்டும் சொல்லி, 123 நாட்களில் நமக்கு எல்லாம் படம் முதன் மறையாக நான் சட்டமன்றத்திற்கு வந்து உள்ளேன். இங்கு மாபெரும் தலைவியின் அனுபவம் நமக்கு எல்லாம் ரோல் மாடலாக உள்ளார்.