தென்காசி,மே 30:
தென்காசி பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி அமைக்க இப்போது இடங்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சரத்குமார் தெரிவித்தார்.
குற்றாலத்தில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த இருதினங்களாக தென்காசி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பேரூராட்சி, நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் இப்போது என்ன பணிகள் நடைபெற்று வருகின்றன. உடனடி தேவை என்ன, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் எந்தளவில் நடைபெற்றுள்ளன, காலதாமதத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.
தென்காசியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு வரும் பகுதியில் உடனடியாக சர்வீஸ் சாலை அமைக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். தென்காசி பகுதியில் ரிங்ரோடு, புதைசாக்கடை திட்டம், தென்காசி தொகுதியில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வாரி மராமத்துப் பணிகள் மேற்கொள்வது, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டும் பணி, குடியிருப்பில் உள்ள குற்றாலம் குடிநீர்த்தேக்கத்தை உடனடியாகப் பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பணிகளை நிறைவேற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை செய்து வருகிறேன். கீழப்பாவூர்,சுரண்டை பகுதியில் உற்பத்தியாகும் காய்கனிகள் மற்றும் விவசாயப் பொருள்களைப் பாதுகாக்கும் வகையில் குளிர்சாதனக் கிட்டங்கி அமைக்கவும், தென்காசி பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி அமைக்கவும் இடத்தைத் தேர்வு செய்து உரிய துறை அமைச்சர்கள் மூலமாக திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.
சுரண்டையில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, செண்பக கால்வாய் திட்டத்தை நிறைவேற்றவும், அரசு மருத்துவமனையில் உடனடியாக சிடி ஸ்கேன் வசதியை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிடி ஸ்கேன் வசதி ஏற்படுத்த காலதாமதம் ஏற்படுமேயானால் நன்கொடையாளர்கள் மூலமாக சிடி ஸ்கேன் வசதி செய்து தரமுடியுமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தனியார் நிறுவனம் மூலம் உயர்தரமான ஸ்கேன் சென்டரை இங்கு தொடங்குவதன் மூலம், சிறிய அளவிலான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாகவும், சிடி ஸ்கேன் போன்றவற்றை சட்டப்பேரவை உறுப்பினரின் பரிந்துரைக் கடிதம் கொண்டு வருபவர்களுக்கு 50 சவிகித கட்டணத் தள்ளுபடியுடன் மருத்துவ வசதியை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறேன்.
தென்காசி அரசு மருத்துவமனையில் தேவையான அளவு மருத்துவர்களை நியமிக்கவும், கால்நடை மருத்துவமனை அமைக்கவும், சுமார் 500 பேர் பணிபுரியக்கூடிய அளவில் தொழிற்சாலை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென்காசியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் 1-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.
மேலும் பாவூர்சத்திரம், சுரண்டை மற்றும் ஊத்துமலை பகுதியிலும் கிளை அலுவலகம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.
‘பேக்கேஜ்’ சுற்றுலாவுக்கு சரத்குமார் ஏற்பாடு

‘’தென்காசி தொகுதியின் தேவைகள், நடந்து வரும் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன். தென்காசி ரயில்வே மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் விரைவில் அமைக்கப்படும். பாவூர்சத்திரம் பகுதியில் காய்கறி பதப்படுத்தும் குளிர்பதன நிலையம் அமைத்தல்,
சுரண்டையில் கால்நடை மருத்துவநிலையம் அமைத்தல், தென்காசியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைத்தல், செண்பக கால்வாய் திட்டம் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றாலத்தில் அருவிகளில் குளிப்பது தவிர வேறு பொழுதுபோக்கு அம்சம் இல்லாததால் தென்காசி பகுதியில் அணைக்கட்டுகளை ஒருங்கிணைத்து பேக்கேஜ் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
பேட்டியின் போது, கட்சியின் அமைப்புச் செயலர் காளிதாசன், கட்சியின் மேற்கு மாவட்டச் செயலர் தங்கராஜ்,சுந்தர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.