Thursday, December 30, 2010

பிரிக்காதீர்கள்!

சென்னை: தமிழகத்தை பிரிக்கக் கூடாது.. இந்த மாதிரி கோரிக்கைக்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.


அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தெலுங்கானா போராட்டத்தால் மத்திய அரசு ஆந்திராவை பிரிக்க அனுமதி அளிக்க முன்வந்த உடனேயே, பல மாநிலங்களில் அவரவர் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கின.

எந்தவித நியாயமான காரணங்களோ, முகாந்திரமோ இல்லாத நிலையில், தமிழகத்திலும், மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்ற குரல் எழுந்திருப்பது வேடிக்கையிலும் வேடிக்கை.

முற்றிலும் அரசியல் ஆதாயம் கருதியும், தங்களால் இயன்ற அளவு குழப்பங்களை உண்டு பண்ணவுமே இத்தகைய அறிவிப்புகளை அவர்கள் வெளியிடும் போக்கை பொதுமக்கள் நன்கு அறிவார்கள். தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்று எழுகின்ற குரலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்கள் சேவைக்காகவும், ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளாமல், புதிதாக பிரச்சினைகளை ஏற்படுத்தி அவற்றை பூதாகரமாக்குவது மக்களுக்கு நன்மை பயக்காது.

நாட்டின் ஒருமைப்பாடு கருதியே மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் ஒரே மொழி பேசப்படும் மாநிலத்தை பிரிப்பதன் மூலம், மொழியால், உணர்வால், கலாச்சாரத்தால் ஒன்றுபட்ட மக்களிடையே உரிமைகளும், சலுகைகளும் வேறுபடும் ஆபத்தும், அதனால் வீணான குழப்பங்களும், மோசமான விளைவுகளும் ஏற்படும் வாய்ப்புண்டு.

எனவே, இன்று டெல்லியில் நடைபெற இருக்கும் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில், மத்திய அரசு நிர்பந்தங்களுக்கும், போராட்டங்களுக்கும் பயந்து அடிபணிந்துவிடாமல், ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணிக்க வேண்டும்.

சாதி அடிப்படையிலோ, பிற தேவையற்ற காரணங்களாலோ மாநிலங்களைப் பிரிப்பதற்கு குரல் கொடுக்கும் இயக்கங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

நிவாரண தொகையாக குறைந்தபட்சம் ரூபாய் 2,000 வழங்க வேண்டும்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விடுத் துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து பெரும் சேதம் விளைத்து வருகிறது. சென்னை, கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் இந்தப் பாதிப் பின் பட்டியலில் அடங்கும்.

விவசாய விளைநிலங்கள் இப்பெருமழையால் பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளான தோடு, மீனவர்களும் கடலுக்குச் செல்ல முடியாமல் வரு வாயிழந்து தவிக்கின்றனர். பொதுமக்களும் அவதிப்பட்டு இயல்பு வாழ்க்கை பெருமள வில் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரம் உள்பட மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை கள் மிகவும் பழுதடைந்து போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதற் கட்டமாக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களுக்கு ஹெக்டே ருக்கு ரூபாய் 8,000 வழங்கவிருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. அதிலும் 50 சதவிகிதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூபாய், 8,000 வீதமும், நெல் தவிர மற்ற பயிர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவிலும் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய தொழிலாளர்களின் கூலி உயர்வு, உர விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு இவற்றைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது குறைந்தபட்சம் ஹெக்டேருக்கு ரூபாய் 15,000 நிவாரணமாக வழங்கவேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.

மீனவர்களுக்கு படகுகள், கட்டுமரம், வலை போன்றவை பாதிக்கப்பட்டிருந்தால் புதிதாக வாங்குவதற்கு ரூபாய் 7,500 என்பதை 10,000 ரூபா யாகவும், ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றை பழுது பார்ப்பதற்கு நிவாரண உதவியாக வழங்கப்படும் 2,500 ரூபாயை, 5,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கவேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். மீனவர்கள் கடலுக்கு மீண்டும் மீன்பிடிக்கச்செல்லும்வரை பாதிக்கப்பட்ட நாட்களைக் கணக்கில் கொண்டு அந்த நாட்களுக்கு தினமும் ரூபாய் 500 கூடுதல் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

வீடுகளை இழந்தும் வெள்ளத்தால் பொருளிழப்பும் ஏற்பட்டு தவிக்கும் பொது மக்களுக்கு நிவாரண தொகையாக குறைந்தபட்சம் ரூபாய் 2,000 வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாகப் பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைதி புரட்சி ஏற்பட வேண்டும்

பெருந்துறை, டிச. 27-

தமிழகத்தில் நல்லது நடக்க அமைதி புரட்சி ஏற்பட வேண்டும் என நடிகர் சரத்குமார் கூறினார்.  அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றக் கோரி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை வரை மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. பேரணியை கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் தொடங்கி வைத்தார். இந்த பேரணியின் நிறைவு விளக்க பொதுக்கூட்டம் பெருந்துறை பழைய பஸ்நிலையம் அருகில் நடந்தது.
இதில் சரத்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

 பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அத்திக்கடவு-அவினாசி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற ரூ. 85 கோடி மதிப்பில் திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இப்போது திட்டமதிப்பீடு ரூ. 700 கோடியாக  உயர்ந் துள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றினால் 9 ஒன் றியங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். வீட்டிற்கு ஒரு விவசாயி என்ற நிலை வரும். உணவு பொருள் உற்பத்தி அதிகரிக்கும்.  எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு இனிமேலும் தாமதப்படுத்தாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

காமராஜர் தொலை நோக்கு சிந்தனையோடு திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் இப்போது இங்கு ஓட்டு வங்கி அரசியல் நடக்கிறது. இலவச திட்டங்களால் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் உயர்ந்து விடாது. ஆகவே இலவச டி.வி. கொடுப்பதை விட அதை வாங்கும் சக்தியை ஆட்சியாளர்கள் உருவாக்க வேண்டும்.

மக்களுக்கு சேவை செய்யதான் அரசியல் வாதிகளுக்கு மக்கள் பதவி அளிக்கிறார்கள். ஆகவே தவறு செய்தால் தட்டிக்கேட்க வேண்டும். உரிமைகளை கேட்டு பெற வேண்டும். வருகிற சட்ட மன்ற தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் தருவார்கள். அப்போது உங்கள் கை பணம் வாங்க கூச வேண்டும். நல்லவர்களை தேர்ந்தெடுங்கள். அப்படி செய்தால்தான் நல்லது நடக்கும். அதற்கு இங்கு அமைதி புரட்சி வெடிக்க வேண்டும்.

நான் தமிழக முதல்- அமைச்சரை அடிக்கடி சந்திப்பதால் சமத்துவ மக்கள் கட்சி தி.மு.க. வுடன் இணைக்கப்படும் அல்லது கூட்டணி அமைக்கும் என்று சொல்லி வந்தார்கள். தற்போது அங்கு ஊழல் பெருகி விட்டது. எனவே தி.மு.க.வுன் கூட்டணி அமைக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கட்சியின் மாநில துணை தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச்செயலாளர் கருநாகராஜன், துணை பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்ல சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தி.மு.க. அல்லாத கட்சியுடன் கூட்டணி

மேட்டுப்பாளையம்,  டிச. 26-

வருகிற தேர்தலில் தி.மு.க. அல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார். அத்திக்கடவு-அவினாசி கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மேட்டுப் பாளையத்தில் இன்று மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. இதில் ச.ம.க. தலைவர் சரத்குமார்  மோட்டார் சைக்கிளை ஓட்டியபடி பேரணியாக சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அத்திக்கடவு-அவினாசி கால்வாய் திட்டம் ரூ.85 கோடியில் தயாரிக்கப்பட்டது. அது கிடப்பில் போடப்பட்டதால் தற்போது திட்ட மதிப்பு ரூ.670 கோடி யாக உயர்ந்துள்ளது. செயல்படுத்தக்கூடிய ஒரு திட்டம் கிடப்பில் போடப்பட்டிருப்பதை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்த பேரணி நடைபெறுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் உலகலாவிய ஊழலாக உள்ளது. அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து  சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டும் கண்காணித்து வருகிறது. இப்படி இருக்கும் போது துணை முதல்வர் ஸ்டாலின் இழப்புகளை ஊழலாக எடுத்துக் கொள்ள முடியாது என்று கூறுகிறார். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. அரசு விலைவாசியை கட்டுப்படுத்த கோராமல் கட்சியில் உள்ளவர்களுக்கு பதவி கோரி இருப்பது நீராராடியா உரையாடல் மூலம் அம்பலமாகி உள்ளது.

சி.பி.ஐ. விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போது நாங்கள் தவறு செய்ய வில்லை என்று இவர்களாக கூறிக்கொள்ள முடியாது. அரசுக்கு இழப்பு என்றால் மக்களுக்கும் இழப்புதான். சமுதாயத்துக்கும் இழப்பு தான், பொருளாதாரத்துக்கும் இழப்புதான். சி.பி.ஐ. விசாரணை கண்துடைப்பா என்பது அதன் அறிக்கை வந்த பிறகுதான் தெரியும்.

வருகிற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும். அது தி.மு.க. அல்லாத கூட்டணியாக அமையும். கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இன்னும் ஒருவாரத்தில் அதற்கான முடிவு எடுக்கப்படும். ஜனவரி 21-ந்தேதி அரசலூரில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் கள் விற்பனை தொடங்கப்படுகிறது. கள் இயக்கத்துக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவளிக்கும்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்

சரத்குமார் தலைமையில் மோட்டார் சைக்கிள் பேரணி

மேட்டுப்பாளையம், டிச. 26-

அத்திக்கடவு- அவினாசி கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மேட்டுப்பாளையத்தில் இன்று மோட்டார் சைக்கிள் பேரணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் பேரணி தொடங்கியது. கட்சியின் தலைவர் சரத்குமார் பேரணிக்கு தலைமை தாங்கி னார். பின்னர் மோட்டார் சைக்கிளை ஓட்டியபடியே பேரணியில் பங்கேற்றார். அவரை தொடர்ந்து கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அணி வகுத்து சென்றனர்.

பேரணி காரமடை, கரியாம் பாளையம், அன்னூர், கருவலூர், ஆட்டையம் பாளையம், அவினாசி, சேவூர், சாவக்காட்டுப்பாளையம், நம்பியூர், கெட்டிச்செவியூர், குன்னத்தூர், சீனிபுரம் வழியாக மாலை பெருந் துறையை சென்றடைகிறது. அங்கு விளக்க கூட்டம் நடைபெறுகிறது.

மோட்டார் சைக்கிளில் சென்ற சரத்குமார் ஆங்காங்கே திட்டத்தின் தேவை குறித்து மக்களிடம் விளக்கினார். வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிள் பேரணியில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் என்.என்.சண்முகசுந்தரம், கோவை வடக்கு செயலாளர் நேருஜி, நகர மாவட்டச் செயலாளர் கணேசன், ஈரோடு வடக்கு செயலாளர் லாலா கணேசன், தெற்குச் செயலாளர் சிங்கம் வேலுச்சாமி, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் ஜெயக்கொடி, அன்னூர் நகரச் செயலளார் பொன்னுச்சாமி, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், திருப்பூர் மனோகரன், தளி சிவக்குமார், அவினாசி சித்ரவேல், முருகேசன், ஊத்துக்குளி வெங்கிடசாமி, சேலம் முருகேசன், வெஸ்லி.

கட்சியின் மாநில நிர்வாகி கள் துணைத் தலைவர் ஏ.நாராயணன், கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயப்பிரகாஷ், துணைப் பொதுச் செயலாளர் இளஞ்சேரன், இளைஞரணி செயலாளர் கராத்தே சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பெட்ரோல் விலை உயர்வை திரும்பப்பெறவேண்டும்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் பெட்ரோல் விலை மட்டும் சுமார் 12 ரூபாய் சிறிது சிறிதாக விலை ஏற்றினால் தெரியாது என்று உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்களை காரணம் காட்டி மத்திய அரசு தப்பிக்கமுடியாது. காரணம் ஒவ்வொரு முறையும் எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்த்தும்போதும் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெறவேண்டும் என்பது நிபந்தனை.

எனவே விலை உயர்வு என்பது எண்ணெய் நிறுவனங்களின் முடிவு மட்டுமே என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. மறைமுகமாக மத்திய அரசும் பெட்ரோல் விலை உயர்வுக்கு உடந்தை என்பது தெளிவாகிறது. எனவே மத்திய அரசு பெட்ரோல் விலை உயர்வை திரும்பப்பெறவேண்டும்.

மேலும் ஏற்கனவே பல அறிக்கைகளில் குறிப்பிட்டபடி, எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு நாடுகளுடன் பேசி வளரும் நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தை கணக்கில்கொண்டு அத்தகைய நாடுகளுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு கச்சா எண்ணெய் விலையை உயர்த்தக்கூடாது என்ற கோரிக்கையை வைக்கவேண்டும் என பிரதமரை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

Tuesday, December 28, 2010

விலைவாசி உயர்வின் பாதிப்புகள்:


Sunday, December 26, 2010

தி. மு. க உடன் உறவு இல்லை


தேதி : 26/12/2010
- சரத்குமார்.
தலைவர் , சமத்துவ மக்கள் கட்சி

Saturday, December 25, 2010

சமத்துவ மக்கள் கட்சின் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்திகள் :

அனைத்து இடர்களில் இருந்தும் மீண்டு அமைதி வாழ்க்கை வாழ்வதற்கு, சமத்துவம் இப் புவி எங்கும் தலைதொன்குவதற்கு, அன்பென்னும் அஸ்திவாரத்தை பலப்படுத்துவதற்கு, இப்புனித நன்னாளாம் கிறிஸ்துமஸ் திருநாளில் நம் அனைவரும் உறுதி ஏற்போம். அன்பின் சின்னமாக திகழும் ஏசு பிரானின் ஆசியும் , அருளும் நலிந்தோருக்குக்கும், ஏழைகளுக்கும், ஆதரவு அற்றோருக்கும் முழுமையாக கிடைத்து , அவர்கள் வாழ்வில் ஒளிபிறக்க  வேண்டும் என்று இந்த நன்னாளில் நம் அனைவரும் பிராத்தனை செய்வோம் . கிறிஸ்துமஸ்  பண்டிகையை கொண்டாடும் என் சகோதர சகோதிரிகளுக்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை என் சார்பிலும் சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் தெரிவித்து கொள்கிறேன்..

தேதி : 25/12/2010
- சரத்குமார்.
தலைவர் , சமத்துவ மக்கள் கட்சி


Friday, December 24, 2010

Sarathkumar Ramanathan

Sarathkumar Ramanathan (சரத்குமார் ராமநாதன்) (born July 14, 1954) is .an Indian journalist, film actor, politician, body builder and the current president of the South Indian Film Artistes' Association. He started his career in Tamil cinema playing negative roles, and later played minor roles in other movies. He was first chosen for the lead role in Suriyan, which was a success at the box office. He has frequently played the role of an honest cop. He also began a new political party in Tamil Nadu to carry out the ideals of K. Kamaraj.

Samathuva Makkal Katchi (AISMK)


Sarat Kumar launched Agila India Samathuva Makkal Katchi (AISMK) in Chennai on August 31, 2007. The party is launched with a promise of establishing a clean, corruption- free transparent political party The red-yellow party flag with a white star in the red portion was also introduced. The inaugural lamp was lit by His wife Radikaa. The main-office bearers of the party were also introduced on the occasion. The rally was well attended by His supporters.