Thursday, December 30, 2010

நிவாரண தொகையாக குறைந்தபட்சம் ரூபாய் 2,000 வழங்க வேண்டும்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விடுத் துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து பெரும் சேதம் விளைத்து வருகிறது. சென்னை, கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் இந்தப் பாதிப் பின் பட்டியலில் அடங்கும்.

விவசாய விளைநிலங்கள் இப்பெருமழையால் பெருமளவில் பாதிப்பிற்கு உள்ளான தோடு, மீனவர்களும் கடலுக்குச் செல்ல முடியாமல் வரு வாயிழந்து தவிக்கின்றனர். பொதுமக்களும் அவதிப்பட்டு இயல்பு வாழ்க்கை பெருமள வில் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரம் உள்பட மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை கள் மிகவும் பழுதடைந்து போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதற் கட்டமாக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களுக்கு ஹெக்டே ருக்கு ரூபாய் 8,000 வழங்கவிருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. அதிலும் 50 சதவிகிதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூபாய், 8,000 வீதமும், நெல் தவிர மற்ற பயிர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவிலும் நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய தொழிலாளர்களின் கூலி உயர்வு, உர விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு இவற்றைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது குறைந்தபட்சம் ஹெக்டேருக்கு ரூபாய் 15,000 நிவாரணமாக வழங்கவேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.

மீனவர்களுக்கு படகுகள், கட்டுமரம், வலை போன்றவை பாதிக்கப்பட்டிருந்தால் புதிதாக வாங்குவதற்கு ரூபாய் 7,500 என்பதை 10,000 ரூபா யாகவும், ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றை பழுது பார்ப்பதற்கு நிவாரண உதவியாக வழங்கப்படும் 2,500 ரூபாயை, 5,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கவேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். மீனவர்கள் கடலுக்கு மீண்டும் மீன்பிடிக்கச்செல்லும்வரை பாதிக்கப்பட்ட நாட்களைக் கணக்கில் கொண்டு அந்த நாட்களுக்கு தினமும் ரூபாய் 500 கூடுதல் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

வீடுகளை இழந்தும் வெள்ளத்தால் பொருளிழப்பும் ஏற்பட்டு தவிக்கும் பொது மக்களுக்கு நிவாரண தொகையாக குறைந்தபட்சம் ரூபாய் 2,000 வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை உடனடியாகப் பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment